தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Shubman Gill: 'ஆல் ஏரியா ஐயா கில்லி'-டெஸ்டில் சுப்மன் கில் 2வது சதம்

Shubman Gill: 'ஆல் ஏரியா ஐயா கில்லி'-டெஸ்டில் சுப்மன் கில் 2வது சதம்

Manigandan K T HT Tamil
Mar 11, 2023 02:30 PM IST

Ind vs Aus: இந்தியா-ஆஸ்திரேலியே இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசினார்.

சதம் விளாசிய கில்
சதம் விளாசிய கில் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 102 ரன்களை விளாசினார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 480 ரன்களை விளாசியது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை இந்தியா தொடங்கி விளையாடி வருகிறது.

இந்திய அணி 3வது நாள் ஆட்டமான இன்றைய தினத்தில் காலை முதலே சிறப்பாக விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, 42 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதனிடையே, சர்வதேச டெஸ்டில் சுப்மன் கில் 2வது சதத்தை விளாசினார்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கவாஜா, மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த க்ரீன் ஆகியோர் இணைந்து 208 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். 

இதன் விளைவாக தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 400 ரன்களை கடந்த போதிலும், தனது மாயஜால சுழலில் ஆஸ்திரேலியாவின் லோயர் ஆர்டரை காலி செய்தார் அஸ்வின்.

பார்டர் கவாஸ்கர் 2023 தொடரின் முதல் மூன்று போட்டிகள் முழுவதுமாக 3 நாள் கூட நடைபெறாத நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு நாள்கள் வரை நடைபெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி, பேட்டிங் மற்றும் பெளலிங் என இரண்டுக்கும் சாதமாக இருந்த ஆடுகளத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்