தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Football: ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை-பின்வாங்கிய கால்பந்து அணி!

Football: ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் நடவடிக்கை-பின்வாங்கிய கால்பந்து அணி!

Manigandan K T HT Tamil
Feb 12, 2023 12:39 PM IST

Canada women's football team: அதைத் தொடர்ந்து மகளிர் கால்பந்து அணி வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

கனடா மகளிர் கால்பந்து அணி
கனடா மகளிர் கால்பந்து அணி (@CANWNT)

ட்ரெண்டிங் செய்திகள்

உலகக் கோப்பை தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், பல்வேறு மாற்றங்களை புகுத்தக் கோரி கனடா மகளிர் கால்பந்து அணி கோரிக்கை முன்வைத்தது.

இதற்காக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கியது.

இந்நிலையில், திடீரென SheBelieves கோப்பை ஆட்டத்தில் அமெரிக்கா அணியுடன் மோதுவதற்காக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கனடா கால்பந்து சங்கம் அறிக்கை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து மகளிர் கால்பந்து அணி வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கனடா கால்பந்து எங்களிடம் எங்கள் வேலை நிறுத்த நடவடிக்கை சட்டவிரோதம் என்று தெரிவித்தது.

நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வியாழன் அன்று அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு உறுதியளிக்கவில்லை என்றால் எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலிப்போம் என்று எங்களிடம் சொன்னார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டைன் சின்கிளையர் கூறுகையில், "பெண்கள் அணிக்கு சுமார் CAN$5 மில்லியனுடன் (US$3.73, 3.5 மில்லியன் யூரோக்கள்) ஒப்பிடும்போது, ​​ஆண்கள் அணிக்கு CAN$11 மில்லியனுக்கும் (US$8.22 மில்லியன், 7.68 மில்லியன் யூரோக்கள்) கூட்டமைப்பு ஒதுக்கியது" என்றார்.

முன்னதாக, கனடா அதிகாரிகளுடன் மகளிர் வீராங்கனைகள் நேற்று கலந்தாலோசனை நடத்தினர்.

WhatsApp channel

டாபிக்ஸ்