தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Dinesh Karthik: கமெண்ட்ரி முடித்த பிறகு மும்பையில் சரவெடி - ரன் வேட்டையில் டிகே

Dinesh Karthik: கமெண்ட்ரி முடித்த பிறகு மும்பையில் சரவெடி - ரன் வேட்டையில் டிகே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 22, 2023 01:15 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வரும் கார்த்திக், இரண்டாவது டெஸ்ட முடிந்த கையோடு மும்பையில் நடைபெற்ற டிஒய் பாட்டீல் டி20 தொடரில் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

டிஒய் பாட்டீல் டி20 கோப்பை தொடரில் பேட்டிங்கில் அசத்திய தினேஷ் கார்த்திக்
டிஒய் பாட்டீல் டி20 கோப்பை தொடரில் பேட்டிங்கில் அசத்திய தினேஷ் கார்த்திக்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட மூன்று நாள்களில் முடிவுற்ற நிலையில், 1983 உலகக் கோப்பை வீரர்கள் தங்களது கேப்டன் கபில் தேவ் வீட்டுக்கு விசிட் அடித்து ஜாலியாக நேரத்தை செலவிட்டனர்.

அதைப் போல் தினேஷ் கார்த்திக்கும் போட்டி முடிந்த கையோடு மும்பை பறந்து சென்று அங்கு நடைபெற்ற டிஒய் பாட்டீல் டி20 கோப்பை தொடரில் பங்கேற்று அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆர்பிஐ அணிக்கு எதிராக போட்டியில் டிஒய் பாட்டீல் குரூப் பி அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.

இக்கட்டான நிலையில் இருந்த டிஒய் பாட்டீஸ் குரூப் பி அணியை தனது அற்புதமான ஆட்டத்தால் மீட்டுள்ளார். இந்தப் போட்டியில் ஆர்பிஐ அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உள்ளூர் கிரிக்கெட், ஐபிஎல் தொடர் போன்றவற்றில் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக், இந்த முறை வர்ணனையாளர் பணியை முடித்துவிட்டு உடனடியாக பேட்டை எடுத்து சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2004 முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அணியில் நிலையான இடம் கிடைக்காமல் வருவதும் போவதுமாக இருந்து வரும் வீரராக இருக்கும் கார்த்திக், சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு இல்லாத போது உள்ளூர் போட்டிகளில் தவறாமல் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவர் அணிக்கு பலமுறை கம்பேக் கொடுத்துள்ளார். இடையே வர்ணனையாளராகவும் தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக், பின்னர் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு உலகக் கோப்பை தொடரில் அவரது பேட்டிங் அமையவில்லை. இதனால் அணியிலிருந்து மீண்டும் கழட்டிவிடப்பட்ட அவர், பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார்.

அத்தோடு இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கிரிக்கெட்டையும் தொடர்ந்து, தனது பார்மை இழக்காமல் வைத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்