தமிழ் செய்திகள்  /  Sports  /  Afghanistan Rashid Khan Ruled Out Of Opening Odis Of Sri Lanka Series

Rashid Khan: இலங்கைக்கு எதிரான 2 ODI போட்டிகளை தவறவிடும் ரஷித் கான்-காரணம் என்ன?

Manigandan K T HT Tamil
Jun 01, 2023 12:22 PM IST

Srilanka Cricket: எனினும், கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அணியில் சேருவார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆப்கன் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான்
ஆப்கன் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான்

ட்ரெண்டிங் செய்திகள்

எனினும், கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அணியில் சேருவார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ரஷித் கான் ஐசிசி தரவரிசையில் டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலராக உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ரஷித் கான், மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் 2023 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய டாப் 3 பவுலர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில், இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

ஹம்பன்தோட்டாவில் நாளை காலை 10 மணிக்கு முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

போன்று போட்டிகளுமே அம்பன்தோட்டாவில் நடக்கிறது. இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஜூன் 4ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 7ம் தேதியும் நடைபெறுகிறது.

ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஆப்கானிஸ்தானை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வழிநடத்துகிறார். முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, முகமது நபி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை தொடரை முடித்த கையோடு, ஒரு வாரம் கழித்து ஆப்கன் அணி வங்கதேசத்திற்கு செல்கிறது.

அங்கு அந்நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஜூன் 14ம் தேதி விளையாடுகிறது.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் நெருங்கி வரும் நிலையில் இந்தத் தொடர் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

இலங்கை அணி ஐசிசி தரவரிசையில் 9வது இடத்தில் இருப்பதால் உலகக் கோப்பைக்கு இன்னும் தகுதி பெறவில்லை. ஜிம்பாப்வேயில் விரைவில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது.

இலங்கையை தசன் ஷனகா வழிநடத்துகிறார். பதும் நிசங்கா, குசல் மென்டிஸ், ஏஞ்செலோ மாத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்