தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Wtc Points Table Team India Moved To Top Spot Again After Historic Win Over South Africa Tour

WTC Points Table: ‘ஒரே அடி.. முதல் இடத்தில் கெத்தாக அமர்ந்த இந்தியா’ உலகக் கோப்பை டெஸ்ட் ரேங்கிங் இதோ!

Jan 04, 2024 07:51 PM IST Stalin Navaneethakrishnan
Jan 04, 2024 07:51 PM , IST

  • WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

WTC Points Table: தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது கனவாகவே உள்ளது. கேப்டவுனில் நடந்த இப்போட்டியில் இந்தியா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.

(1 / 7)

WTC Points Table: தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது கனவாகவே உள்ளது. கேப்டவுனில் நடந்த இப்போட்டியில் இந்தியா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.(PTI)

WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2023-25 சுழற்சியில், இந்தியா இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொன்று டிரா ஆனது. இதன் மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.

(2 / 7)

WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2023-25 சுழற்சியில், இந்தியா இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொன்று டிரா ஆனது. இதன் மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.(REUTERS)

WTC Points Table: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இரண்டு டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

(3 / 7)

WTC Points Table: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, இரண்டு டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.(REUTERS)

WTC Points Table: நியூசிலாந்து அணியும் இந்த சுழற்சியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

(4 / 7)

WTC Points Table: நியூசிலாந்து அணியும் இந்த சுழற்சியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.(AP)

WTC Points Table: சமீபத்திய டபிள்யு.டி.சி சுழற்சியில் ஆஸ்திரேலியா ஏழு டெஸ்ட்களுக்கு மேல் விளையாடியுள்ளது. 4 வெற்றி, 2 தோல்வி. ஒன்று டிராவில் முடிந்தது. அந்த அணி 42 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.

(5 / 7)

WTC Points Table: சமீபத்திய டபிள்யு.டி.சி சுழற்சியில் ஆஸ்திரேலியா ஏழு டெஸ்ட்களுக்கு மேல் விளையாடியுள்ளது. 4 வெற்றி, 2 தோல்வி. ஒன்று டிராவில் முடிந்தது. அந்த அணி 42 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.(AFP)

WTC Points Table: நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்ற வங்கதேசம் 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் 5வது இடத்தில் உள்ளது.

(6 / 7)

WTC Points Table: நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்ற வங்கதேசம் 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் 5வது இடத்தில் உள்ளது.(AFP)

WTC Points Table: பாகிஸ்தான் அணி 4 டெஸ்டில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. 22 புள்ளிகள் பெற்று 45.83 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

(7 / 7)

WTC Points Table: பாகிஸ்தான் அணி 4 டெஸ்டில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. 22 புள்ளிகள் பெற்று 45.83 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.(AP)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்