Virat Kohli Record: சதத்தை மிஸ் செய்தாலும் சாதனையை மிஸ் செய்யாத கோலி! பஞ்சாப்புக்கு எதிராக புதிய சாதனை
- PBKS vs RCB, IPL 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்களில் சதத்தை மிஸ் செய்தாலும், விராட் கோலி சாதனைகளை மிஸ் செய்யவில்லை. இந்த போட்டியில் கோலி நிகழ்த்தியிருக்கும் சாதனைகளை பார்க்கலாம்
- PBKS vs RCB, IPL 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்களில் சதத்தை மிஸ் செய்தாலும், விராட் கோலி சாதனைகளை மிஸ் செய்யவில்லை. இந்த போட்டியில் கோலி நிகழ்த்தியிருக்கும் சாதனைகளை பார்க்கலாம்
(1 / 4)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதானமும், அதிரடியும் காட்டி விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் அடித்தார். 8 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார். இவரது இந்த அதிரடி தான் ஆர்சிபி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது
(2 / 4)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த வீரராக மாறினார் கோலி. இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக இதை நிகழ்த்தியிருந்தார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் அடித்திருப்பதன் மூலம் மூன்று வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். கோலி இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 1030, பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக 1020, சென்னை சூப்பர் சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக 1006 ரன்கள் அடித்துள்ளார்
(3 / 4)
இந்த சீசனில் 600 ரன்களை கடந்த வீரராக மாறியுள்ளார் கோலி. தற்போது வரை 634 ரன்கள் அடித்துள்ளார்.அதிக ரன்களை அடிக்கு ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்திருக்கும் கோலி, ஐபிஎல் தொடர்களில் நான்காவது முறையாக 600 ரன்களுக்கு மேல் கடந்துள்ளார். 2013, 2016, 2023 ஆகிய சீசன்களில் கோலி இதை செய்துள்ளார்
மற்ற கேலரிக்கள்