தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sun In Krittika Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்துக்குப் போக ரெடியான சூரிய பகவான்.. 3 ராசிகளுக்கு சொயிங் சொயிங் தான்!

Sun In Krittika Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்துக்குப் போக ரெடியான சூரிய பகவான்.. 3 ராசிகளுக்கு சொயிங் சொயிங் தான்!

May 09, 2024 07:46 PM IST Marimuthu M
May 09, 2024 07:46 PM , IST

  • Lord Sun In Krittika Nakshatra: கிருத்திகை நட்சத்திரத்தில் புலம்பெயரும் சூரிய பகவானால், மூன்று ராசியினர் சிறப்பான நேரத்தைப் பெறுகின்றனர். அது குறித்துக் கீழே காண்போம்.

Lord Sun In Krittika Nakshatra: சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் புலம்பெயர சுமார் 30 நாட்கள் ஆகும். ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் ஒரு ஆண்டுக்குள் 12 ராசிகளிலும் பயணிக்கிறது. சூரிய பகவான், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குப் புலம்பெயர்வது, ஒவ்வொரு ராசியிலும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை உண்டாக்குகின்றன.அதேபோல், சூரிய பகவானும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நட்சத்திரத்துக்குச் செல்லும்போது, சில ராசியினருக்கு நற்பலன்களையும் சில ராசியினருக்கு சுமாரான பலன்களையும் தருகிறார்.  

(1 / 6)

அதன்படி, சூரிய பகவான் வரக்கூடிய மே 11ஆம் தேதி, கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரத்தில் காலை 7:13 மணிக்குப் புலம்பெயர்கிறார். மேலும் அங்கு மே 25ஆம் தேதி காலை 3 மணி 27 நிமிடங்கள் வரை பயணிப்பார். அதன்பின், சூரிய பகவான் ரோஹிணி நட்சத்திரத்தில் பிரவேசிப்பார். சூரிய பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் புகுவதால் சில ராசியினர் நன்மைகளைப் பெறுகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிருத்திகை நட்சத்திரத்தில் சூரிய பகவான் ஆளுகைச் செலுத்துகிறார். 27 நட்சத்திரங்களில் கிருத்திகை மூன்றாவது நட்சத்திரமாகும். இத்தகைய கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பிக்கையானவர்கள், பலருக்கும் வழிகாட்டும் பண்புகளைக் கொண்டிருப்பவர்கள், எளிமையான வாழ்க்கையை வாழ ஆசைப்படுபவர்கள், பரந்துபட்ட நட்பும் கொண்டிருப்பர். ஆதலால், சூரிய பகவான், கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைவதால் சில ராசியினருக்கு அபரிமிதமான பலன்களைப் பெறப்போகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். 

(2 / 6)

கடகம்: இந்த ராசியினருக்கு, கிருத்திகை நட்சத்திரத்தில் சூரிய பகவான் நுழைவது பல நன்மைகளையே தருகிறது. இக்காலகட்டத்தில் பெண்டிங் வைத்த பணிகளை எளிதில் முடிப்பர். வேலையை உங்களது சாமர்த்தியமான நுட்பத்தால் எளிதில் முடிப்பீர்கள். கடக ராசியினருக்கு, ஊதிய உயர்வு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் முதலாளிகளிடம் உங்கள் கடினமான உழைப்பு தெரியவரும். சரியான இலக்குகளை நோக்கி உங்கள் நகர்வு இருக்கும். தொழில் முனைவோருக்கு கிடைக்காமல் இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதி நிலை படிப்படியாக அதிகரித்து, சமூகத்தில் உங்கள் மேல் தனி மரியாதை உண்டாகும்.

(3 / 6)

கன்னி:கிருத்திகை நட்சத்திரத்தில் சூரிய பகவானின் நுழைவு என்பது, கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.  பணியிடத்தில் கடின உழைப்பினை போட்டு பணிபுரிந்தவர்களுக்கு, இக்கட்டத்தில் பெரிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். இந்தப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு போராட்டங்கள் முடிவுக்கு வரும். இறைநம்பிக்கை அதிகரிக்கும். இறைப்பணி மன நிம்மதியைத் தரும்.கன்னி ராசியினரின் அறிவுத்திறன், தகவல் தொடர்புத்திறன் மற்றும் புரிதல் மேம்படும். குடும்பத்தினருடன் புனிதமான கோயிலுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கிருத்திகையில் சூரிய பகவான், சஞ்சரிப்பதால் வெளிநாட்டில் படிக்கும் கன்னி ராசியினருக்கு, நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

தனுசு: தனுசு ராசிக்காரர்கள், கிருத்திகை நட்சத்திரத்தில் சூரிய பகவானின் சஞ்சாரத்தினால் பெரிதும் பயனடைவார்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தனுசு ராசியினரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் உங்களுக்கு எதிரிகள் தெரியமாட்டார்கள். போட்டித்தேர்வுக்கு முயற்சிக்கும் தனுசு ராசியினருக்கு, இக்காலம் சாதகமான காலகட்டமாகும். வேலை சரிவர கிடைக்காத தனுசு ராசியினர், இக்காலகட்டத்தில் நல்ல வேலையினைப் பெறுவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்