Mundhiri Disadvantages: அளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிட்டால் ஏற்படும் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்
- ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக முந்திர இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகளும் ஏற்படலாம். முந்திரியால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் தீங்கு, பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக முந்திர இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகளும் ஏற்படலாம். முந்திரியால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் தீங்கு, பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 6)
நட்ஸ் வகைகளில் ஒன்றாக இருந்து வரும் முந்திரி சாப்பிடுவதால் இதயம், எலும்பு ஆரோக்கியம் பெறுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம். முந்திரியால் சில தீமைகளும் ஏற்படுகின்றன
(2 / 6)
சீறுநீரக கற்கள் இருப்பவர்கள் முந்திரி அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் ஆக்சலேட்கள் நிரம்பியிருப்பதால், கால்சியம் உறிஞ்சுதலை தடு€த்து சிறுநீரக கல் உருவாவதை துரிதப்படுத்தும்
(3 / 6)
கலோரிகளும், ஆரோக்கிய கொழுப்புகளும் நிறைந்திருப்பதால் உடல் எடையை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் முந்திரியில் 163 கலோரிகளும், ஒரு கப்பில் 786 கலோரிகளும் உள்ளன. எடை அதிகரிப்பால் பருமன் ஏற்பட்டு டயபிடிஸ், அதிக கொல்ஸ்ட்ரால், இதயம் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படலாம்
(4 / 6)
முந்திரியில் இருக்கும் தைராமின் என்ற இயற்கையான வேதிபொருளின் காரணமாக, சிலருக்கு தலைவலி பாதிப்பை ஏற்படுத்தலாம். மைக்ரேன் பாதிப்பு இருப்பவர்கள் தலைவலியால அவதிக்குள்ளாகவலாம்
(5 / 6)
நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு நன்மை தருவதோடு குடல் இயக்கத்தையும் ஊக்கப்படுத்துகிறது. அதிகப்படியான நார்ச்சத்து வாயு பிரச்னை, வயிறு உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதன் மலத்திலும் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம்
மற்ற கேலரிக்கள்