தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Google Commemorates The 75th Anniversary Of Anne Frank S Diary

Anne Frank : யார் இந்த ஆனி ஃபிராங்க்? டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்!

Jun 25, 2022 02:41 PM IST Divya Sekar
Jun 25, 2022 02:41 PM , IST

  • புகழ் பெற்ற ஆனி ஃபிராங்கின் டைரி புத்தகமாக வெளியிடப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிவிட்டதை தொடர்ந்து கூகுல் நிறுவனம் ஆனி ஃபிராங்கிற்கு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஆனி ஃபிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தன்னுடைய குடும்பத்துடன் நெதர்லாந்தில் வசித்து வந்தார்.

(1 / 8)

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.

(2 / 8)

ஆனி ஃபிராங்க் ரகசியமாக வாழ்ந்து வந்ததால் அவரால் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்கு செல்லாமல்,விளையாடாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது இவருக்கு துணையாய் இருந்தது இவரது டைரி தான். 

(3 / 8)

அதனை அவர் ஒரு டைரியாக பார்க்கவில்லை தன்னுடைய உணர்வுகளை வெளிபடுத்தும் ஒரு நண்பனாக பார்த்தார். ஆனி ஃபிராங்க் தான் எழுதிய அந்த டைரிக்கு ”கிட்டி” என பெயர் வைத்து அதை தன்னுடைய நண்பனாக நிணைத்து தன்னுடைய தினசரி அனுபவங்களையும், மறைந்து வாழ்வதில் எதிர்கொண்ட சிக்கல்களையும் பதிவு செய்துள்ளார்.

(4 / 8)

இவர் எழுதிய டைரி குறிப்புகள் இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தும் வகையில் இருந்ததால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருக்கும் இடம் ஜெர்மனியில் நாசிப்படைகளால் கண்டுபிடிக்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆனி ஃபிராங்க் கொல்லப்பட்டார்.

(5 / 8)

ஆன் பிராங்கின் தந்தையுடன் பணிபுரிந்த மீப் கீஸ் என்பவரால் இவரது டைரி மீட்கப்பட்டது. அதை அவர் ஆன் இடம் கொடுப்பதற்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் ஆன் கொல்லப்பட்டதால் ஆன் குடும்பத்தில் உயிருடன் இருந்த ஒரே ஒருவரான அவர் தந்தையிடம் ஒப்படைத்தார்.

(6 / 8)

இதையடுத்து புத்தகமாக ஆனி ஃபிராங்க் டைரி குறிப்பு 1947 அம் ஆண்டு ஜுன் 25 ஆம் தேதி “தி டைரி ஆப் யங் கேல்” (ஒரு இளம்பெண்ணின் டைரி) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

(7 / 8)

ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இருபதாம் நூற்றாண்டில் வெளியான தலைசிறந்த புத்தகங்களுள் முதன்மையானதாக கருத்தப்படுகிறது.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்