தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Find Out On World Italian Day!

World Idli Day 2023: உலக இட்லி தினத்தில் இதை தெரிஞ்சுக்கோங்க!

Mar 30, 2023 10:30 PM IST Pandeeswari Gurusamy
Mar 30, 2023 10:30 PM , IST

6 மாத குழந்தைமுதல் 100 வயது முதியவர் வரை எல்லோரும் உண்ண மிக இதமான உணவான இட்லி பத்தி இதையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க

சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

(1 / 8)

சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.(@Savalgishweta )

இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது.

(2 / 8)

இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது.(@iamtitanoboa)

10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.

(3 / 8)

10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.(@bigbossunflower)

கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள்.

(4 / 8)

கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில், `இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள்.(unsplash)

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி  புழக்கத்தில் உள்ளது.

(5 / 8)

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி  புழக்கத்தில் உள்ளது.(@Bharggavroy)

இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(6 / 8)

இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.(@dosa_idli)

கோவையில் ஆட்டோ டிரைவராக இருந்த இனியவன் அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இட்லி தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

(7 / 8)

கோவையில் ஆட்டோ டிரைவராக இருந்த இனியவன் அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இட்லி தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.(@IndiaTales7)

தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மார்ச் 30ந் தேதி உலக இட்லி தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. 

(8 / 8)

தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மார்ச் 30ந் தேதி உலக இட்லி தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. (@hosmelkar001)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்