தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hair Care: இந்த எளிய டிப்ஸ் போதும்! தலை முடி உதிர்வுக்கு டாடா சொல்லிடலாம்

Hair Care: இந்த எளிய டிப்ஸ் போதும்! தலை முடி உதிர்வுக்கு டாடா சொல்லிடலாம்

Jun 24, 2023 01:11 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 24, 2023 01:11 PM , IST

  • தலைமுடி உதிர்வு என்பது தற்போது வயது வித்தியாசமின்றி பொதுவான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆண், பெண் என இருவருக்கும் தலைமுடி உதிர்வு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் தலைமுடி உதிர்வுக்கு விடை கொடுக்கலாம்.

தலைமுடி உதிரவுக்கு முக்கிய காரணமாக மரபியல் பிரச்னை, மனஅழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை பிரதான காரணங்களாக உள்ளது. தலைமுடி உதிர்வை தடுக்க நாள்தோறும் புதிய ஷாம்புக்களும், ஹேர் கேர் பொருள்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் விட இயற்கையான வழிகளை பின்பற்றினால் நீண்ட நாள் பலனை பெறலாம்

(1 / 8)

உச்சந்தலையில் மசாஜ்:  உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் தலைமுடி ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கலாம். நாள்தோறும் 5 முதல் 10 நிமிடங்கள் உச்சந்தலையில் வட்ட இயக்கத்தில் விரல் நுனியை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதான் தலைமுடிகால்களில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. அத்துடன் தலைமுடியில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களால் ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக தலை முடி உதிர்வு குறைகிறது. மசாஜ் செய்யும்போது தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்களில் ஒன்றை பயன்படுத்தலாம்

(2 / 8)

சிகக்காய்: தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கையான வழிகளில் பிரதான பொருளாக இருப்பது சிகக்காய். இயற்கையான கிளென்சராக இருக்கும் இவை தலை முடி பராமரிப்புக்கு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிகக்காயுடன் மற்ரொரு பொருளாக ரீத்தா, சோப்நட் என்று அழைக்கப்படும் பூந்திக்கொட்டை உள்ளது. ஒரு கைப்பிடி ரீத்தா மற்றும் சிகக்காய் காய்களை தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு ஆறிய பிறகு வடிகட்டி, குளிக்கும்போது தலைமுடி அலசவும். இந்த கலவை தலைமுடிகால்களுக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைக் குறைக்கவும், முடியின் தண்டுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது

(3 / 8)

நெல்லிக்காய்: தலைமுடி பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக நெல்லிக்காய் உள்ளது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் தலைமுடிகால்களுக்கு ஊட்டம் அளித்து தலைமுடி வேர்களை பலப்படுத்துகிறது. நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு அறைத்து பேஸ்ட் ஆக்கி உச்சந்தலை பகுதியில் மெதுவாக தேய்க்கவும். பின்னர் அரை மணி நேரம் வரை ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக நெல்லிக்காய பயன்படுத்துவதன் மூலம் தலை முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, தலைமுடி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது

(4 / 8)

வெந்தயம்: தலைமுடி உதிர்வை தடுப்பதற்கான சிறந்த தீர்வாக வெந்தயம் உள்ளது. இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, அதை நன்கு அறைத்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்டை காலையில் தலைமுடி, உச்சந்தலையில் நன்கு தேய்த்து  கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு, தலையை நன்கு அலசவும். வெந்தய விதைகளில் இடம்பெற்றிருக்கும் புரதம் மற்றும் நிக்கோடினிக் அமிலம், தலைமுடி உதிர்வை தடுக்கு, வளர்ச்சிக்கு உதவுகிறது

(5 / 8)

தேங்காய் பால்: இதில் இடம்பெற்றிருக்கும் ஊட்டச்சத்துகள் முடி உதிர்வை தடுக்கும் வல்லமை கொண்டுள்ளது. தேங்காய் துறுவலில் இருந்து தேங்காய் பால் எடுத்து, பஞ்சு மூலம் லேசாக அதை தொட்டு தலைமுடியில் மெதுவாக தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். தேங்காய்பால் தலைமுடிக்கு ஊட்டமளித்து, அதை பிரகாசமாக்கவும் செய்கிறது

(6 / 8)

முட்டை மாஸ்க்: முட்டையில் நிறைந்துள்ள புரதம் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டை மாஸ்க் உருவாக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை உடைத்து, அந்த கலைவையை தலைமுடியில் மெதுவாக தேய்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்

(7 / 8)

வெங்காய சாறு: போதிய நறுமணம் இல்லாவிட்டாலும் தலை முடி உதிர்வுக்கான சிறந்த தீர்வாக உள்ளது. வெங்காயத்தை நன்கு பிழிந்து அதன் சாற்றை பிரஷ் அல்லது பஞ்சு மூலம் தலைமுடியில் தேய்க்க வேண்டும். பின்னர் லேசாக மசாஜ் செய்து 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். வெங்காய சாற்றில் இடம்பெற்றிருக்கும் கந்தகம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்