தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cleaning Tips: டி.வியை சுத்தம் செய்யும் போது கட்டாயம் கவனிக்க வேண்டியவை என்ன?

Cleaning Tips: டி.வியை சுத்தம் செய்யும் போது கட்டாயம் கவனிக்க வேண்டியவை என்ன?

Nov 07, 2023 01:05 PM IST Karthikeyan S
Nov 07, 2023 01:05 PM , IST

  • டி.வியை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

பெரும்பாலான வீடுகளில் சுவரில் பதித்து வைக்கும் வகையிலான எல்.இ.டி டி.விக்கள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் இதோ..!

(1 / 7)

பெரும்பாலான வீடுகளில் சுவரில் பதித்து வைக்கும் வகையிலான எல்.இ.டி டி.விக்கள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள் இதோ..!

எப்போது டி.வியை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாகத் திரையை மட்டுமல்லாது, டி.விக்கு வரும் மொத்த மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். இதனால் மின் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

(2 / 7)

எப்போது டி.வியை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு முன்னதாகத் திரையை மட்டுமல்லாது, டி.விக்கு வரும் மொத்த மின்சாரத்தையும் நிறுத்த வேண்டும். இதனால் மின் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

பெரும்பாலான டி.வி. திரைகளை சற்று அழுத்தி துடைத்தாலே அவற்றில் கீறல் விழக்கூடும். அதனால், எல்.இ.டி, ஓ.எல்.இ.டி, பிளாஸ்மா போன்ற டி.வி.களின் திரைகளை துடைப்பதற்கு மைக்ரோபைபர் துணி சிறந்தது. 

(3 / 7)

பெரும்பாலான டி.வி. திரைகளை சற்று அழுத்தி துடைத்தாலே அவற்றில் கீறல் விழக்கூடும். அதனால், எல்.இ.டி, ஓ.எல்.இ.டி, பிளாஸ்மா போன்ற டி.வி.களின் திரைகளை துடைப்பதற்கு மைக்ரோபைபர் துணி சிறந்தது. (Getty images)

டி.வி. திரையின் மூலைகளிலும், விளிம்புகளிலும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதேசமயம் இந்தப் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல் மிருதுவாக துடைக்க வேண்டும்.

(4 / 7)

டி.வி. திரையின் மூலைகளிலும், விளிம்புகளிலும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அதேசமயம் இந்தப் பகுதிகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல் மிருதுவாக துடைக்க வேண்டும்.(Getty Images)

டிவி ஸ்கிரினை சுத்தம் செய்வதற்கு சிலர் கெமிக்கல் ஸ்பிரே பயன்படுத்துவார்கள். அது தரமானதாக இருக்கிறதா? என்று கவனித்து வாங்குங்கள். இதை நேரடியாக ஸ்கிரீன் மீது தெளிக்காமல், துப்பதற்கு பயன்படுத்தும் துணியில் முதலில் ஸ்பிரே செய்து அதைக்கொண்டு டி.வி திரையைத் துடைக்க வேண்டும்.

(5 / 7)

டிவி ஸ்கிரினை சுத்தம் செய்வதற்கு சிலர் கெமிக்கல் ஸ்பிரே பயன்படுத்துவார்கள். அது தரமானதாக இருக்கிறதா? என்று கவனித்து வாங்குங்கள். இதை நேரடியாக ஸ்கிரீன் மீது தெளிக்காமல், துப்பதற்கு பயன்படுத்தும் துணியில் முதலில் ஸ்பிரே செய்து அதைக்கொண்டு டி.வி திரையைத் துடைக்க வேண்டும்.(Getty images)

ஸ்பிரே செய்வதற்கு முன்பு உலர்ந்த துணையைக் கொண்டு டி.வி. மீது படிந்துள்ள தூசியைத் துடைக்க வேண்டும். திரை மட்டுமின்றி, ஸ்பீக்கர்கள், போர்ட்களில் இருக்கும் தூசியையும் அகற்றி சுத்தம் செய்வது நல்லது.

(6 / 7)

ஸ்பிரே செய்வதற்கு முன்பு உலர்ந்த துணையைக் கொண்டு டி.வி. மீது படிந்துள்ள தூசியைத் துடைக்க வேண்டும். திரை மட்டுமின்றி, ஸ்பீக்கர்கள், போர்ட்களில் இருக்கும் தூசியையும் அகற்றி சுத்தம் செய்வது நல்லது.(Getty images)

டி.வியை சுத்தம் செய்யும் போது ஒரே வகையான இயக்கத்தில் பலமுறை துடைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் திரையின் மீது கீறல்கள் விழ வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, கிடை மட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ சீரான முறையில் லேசாக அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டும்.

(7 / 7)

டி.வியை சுத்தம் செய்யும் போது ஒரே வகையான இயக்கத்தில் பலமுறை துடைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் திரையின் மீது கீறல்கள் விழ வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, கிடை மட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ சீரான முறையில் லேசாக அழுத்தம் கொடுத்து துடைக்க வேண்டும்.(Getty Images)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்