Roja Love Story: ‘இப்படியும் காதல் சொல்ல முடியுமா?’ ரோஜாவை ஈர்த்த செல்வமணியின் ப்ரபோஸ் இது தான்!
- RK Selvamani: இன்று வரை பிரியாமல் மகிழ்வோடு வாழும் சினிமா பிரபலங்களில் முக்கியமான தம்பதி ரோஜா-செல்வமணி. இவர்களின் காதல், கைகூடிய கதை தெரியுமா?
- RK Selvamani: இன்று வரை பிரியாமல் மகிழ்வோடு வாழும் சினிமா பிரபலங்களில் முக்கியமான தம்பதி ரோஜா-செல்வமணி. இவர்களின் காதல், கைகூடிய கதை தெரியுமா?
(1 / 6)
தான் அறிமுகப்படுத்திய கதாநாயகி ரோஜாவை, தானே திருமணம் செய்து, இன்று வரை இருவரும் மகிழ்வான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனாலும் அவர்கள் காதல், அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை.
(2 / 6)
ரோஜாவை காதலிப்பதற்கு முன், அவர்களின் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற்றார் செல்வமணி. இருந்தாலும், ரோஜாவும், செல்வமணியும் வேறு வேறு ஜாதியினர், மாநிலமும் வேறு. இது அவர்களின் காதலுக்கு இடையூறாக வரலாம் என்று செல்வமணி கருதினார்.
(3 / 6)
எப்படியும் காதலில் ஜெயித்துவிட வேண்டும் என்றால், முதலில் பெற்றோரின் சம்மதம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த செல்வமணி, ரோஜாவின் பெற்றோரிடம் நற்பெயர் வாங்கி, அவர்களிடம் தெரிவித்த பிறகே ரோஜாவிடம் காதலை கூறியுள்ளார்.
(4 / 6)
ரோஜாவின் பிறந்தநாளில் தான், தன்னுடைய காதலை செல்வமணி வெளிப்படுத்தியுள்ளார். அப்போது ரோஜா பயங்கர பீக்கில் இருந்த சமயம். ரோஜாவிடம் செல்வமணி சொன்னது என்ன தெரியுமா?
(5 / 6)
‘நீ இப்போ பீக்ல இருக்க.. உன் ஆசை திரும் வரை நடி.. அதுக்கு எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை.. நான் அது வரை வெயிட் பண்றேன்’ என்று ரோஜாவிடம் கூறியுள்ளார் செல்வமணி.
(6 / 6)
அதற்கு முன் தன் தாய் மூலமாக, செல்வமணியின் ஆசையை தெரிந்திருந்தாலும், நேரடியாக அவர் கூறிய இந்த வார்த்தைகள் ரோஜாவை வெகுவாக ஈர்த்தது. உடனே அவர் அதற்கு ஓகே சொன்னாலும், செல்வமணி காத்திருந்த காலம், 13 ஆண்டுகள். ஆமாம், 13 ஆண்டுகளுக்குப் பிறகே ரோஜா-செல்வமணி திருமணம் நடந்தது. பல பிரபலங்களும் அதில் பங்கேற்றனர். இன்றும் ரோஜாவே அரசியல் பிரபலமாகிவிட்டார். நீடித்து நிலைத்து நிற்கும் சினிமா பிரபல தம்பதிகளில் இவர்களும் ஒருவர் என்பது கூடுதல் மகிழ்ச்சியான விசயம்.
மற்ற கேலரிக்கள்