தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Mental Health Day 2023: "மனநலத்தை பேனி காப்பது மனித உரிமை" - உலக மனநல ஆரோக்கிய நாள் இன்று

World Mental Health Day 2023: "மனநலத்தை பேனி காப்பது மனித உரிமை" - உலக மனநல ஆரோக்கிய நாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 10, 2023 06:10 AM IST

உடல் ஆரோக்கியத்தை போல் மனநலத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மனரீதியாக சோர்வு அடைவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், மனநலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உலக மனநல ஆரோக்கிய நாள் இன்று
உலக மனநல ஆரோக்கிய நாள் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

மனநலத்துக்கு, உடல்நலத்துக்கும் ஒரு வித தொடர்பு உல்ளது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தாலே மனநலம் சார்ந்த பாதிப்புகள், பிரச்னைகளை தவிர்க்கலாம். ஏனென்றால் உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல் மனதில் கவலை, சோர்வு ஏற்படுவதையும் தடுக்கிறது.

உடல்நலத்துக்கு இணையாக மனநலம் ஆரோக்கியமும் முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. உடலுக்கு ஓய்வு அளிப்பதுபோல் மனதுக்கு ரிலாக்ஸ் அளிக்கும் விதமான விஷயங்களை செய்வதில் அக்கறை செலுத்த வேண்டும். பாடல் கேட்பது, எழுதுவது, பிடித்த வேலையே செய்வது, ஊர் சுற்றுவதும் என ஒவ்வொருவருக்கும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் விஷயங்கள் பல உள்ளன.

மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல ஆரோக்கிய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனநல ஆரோக்கிய நாள் வரலாறு

மனநலத்திற்கான உலக கூட்டமைப்பு, கடந்த 1992, அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல நாளாக அறிவித்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் இந்த நாள் புதிய கருபொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் காலத்தில் இந்த நாளுக்கென்று தனிப்பட்ட கருப்பொருள் ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த நாளின் நோக்கமாக மனநலம் தொடர்பான ஆலோசனையை ஊக்குவிப்பதும், அதுதொடர்பான பிரச்னைகளில் பொதுமக்களுக்கு கற்பிப்பதுமே இருந்து வந்தது.

மனநலம் நாள் குறித்த பிரச்சாரம் பிரபலம் அடைந்த நிலையில் 1994 முதல் இந்த நாளுக்கு கருபொருள் உருவாக்கப்பட்டது. அதன்படி முதல் முறையாக இதன் கருபொருளாக உலகம் முழுவதும் மனநலச் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல் இருந்தது.

இதைத்தொடர்ந்து மனநல நாளுக்கென உருவாக்கப்பட்ட பல்வேறு கருபொருள்கள் உலக அளவில் புகழ் பெற்றன.

உலக மனநல நாள் முக்கியத்துவம்

உலக மனநல தினம் பொதுவாக மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. மனநல ஆரோக்கியத்தை சுற்றியுள்ள களங்கத்தை எவ்வாறு உடைப்பது, மனநல பிரச்னைகள் பற்றி பேசுவதன் அது தொடர்பான சிக்கல்கள் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது.

இந்த நாளில், மனநல பிரச்னையுடன் இருப்பவர்களுடன் உரையாடுவதோடு, பணியிடத்தில் ஏற்படும் மனஅழுத்தம், மனச்சோர்வு குறித்தும், மனநல பிரச்னைகளுடன் வாழும் மக்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.

மனநலம் சார்ந்த சிகிச்சையை அணுகுவதற்கு தடையாக இருக்கும் சிக்கல்கள் மற்றும் தயக்கம் குறித்து தெளிவுபடுத்தி அதன் தேவைகள் குறித்து புரிய வைக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்கான உலக மனநல நாள் கருபொருளாக, "மனநலம் என்பது உலகளாவிய மனித உரிமை" என அமைந்துள்ளது. இதன் மூலம் மனநல ஆரோக்கியத்தை மனித உரிமையுடன் ஒப்பீட்டு கருபொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்