தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  World Bank Chief David Malpass Decides To Step Down A Year Early

World Bank: முன்கூட்டியே பதவி விலக உலக வங்கி தலைவர் முடிவு... என்ன காரணம்?

Manigandan K T HT Tamil
Feb 16, 2023 12:48 PM IST

World Bank chief David Malpass: டேவிட் மல்பாஸ் உலக வங்கி குழுமத்தின் 13வது தலைவராக அதன் நிர்வாக இயக்குநர்கள் குழுவால் ஏப்ரல் 5, 2019 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ்
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

டேவிட் மல்பாஸ் உலக வங்கி குழுமத்தின் 13வது தலைவராக அதன் நிர்வாக இயக்குநர்கள் குழுவால் ஏப்ரல் 5, 2019 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் ஏப்ரல் 9 அன்று தொடங்கியது. இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது பதவியில் இருந்து ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னதாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அவருக்கு அடுத்த ஆண்டு வரை பதவிக் காலம் இருக்கிறது.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் உலக வங்கியின் இயக்குநர்கள் குழுவைச் சந்தித்து, நிதியாண்டு முடிவடையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதவி விலகுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தேன்.

உலக வங்கியின் தலைவராக பணியாற்றுவது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும். இதை பாக்கியமான கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மால்பாஸ் முன்பு அமெரிக்காவுக்கான சர்வதேச விவகாரங்களுக்கான கருவூலத்தின் துணைச் செயலாளராக பணியாற்றினார்.

முன்கூட்டியே பதவி விலகுவது குறித்து அவர் லிங்க்டுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக வங்கிக் குழுவானது முக்கியமான வளர்ச்சி சவால்களைச் சமாளிப்பதற்கும், தாக்கத்தை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டேவிட் மல்பாஸ்
டேவிட் மல்பாஸ் (AFP)

உலக வங்கி குழுமத்தின் தலைவராக பணியாற்றுவது எனது மகத்தான கவுரவம் மற்றும் பாக்கியம். உலக வங்கிக் குழும நிறுவனங்களில் உள்ள நிர்வாக இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஆதரவிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகளாவிய நெருக்கடிகளின் போது தொடர்ச்சியான நிதியுதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள 150பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ரஷ்யா-உக்ரைன் போரை சமாளிக்க 170 பில்லியன் டாலர்களை கடனுதவியாக கொடுத்துள்ளோம்.

எனது பொதுத்துறை வாழ்க்கை முழுவதும் நான் செய்ததைப் போலவே, மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவேன்.

உலக வங்கி குழுமம் அதன் போக்கை அமைக்க இது ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான வாய்ப்பாகும். வரவிருக்கும் வாரங்களில் எங்கள் முன்னேற்றம் பற்றி நான் இன்னும் சொல்ல வேண்டும் என்று அந்தப் பதிவில் டேவிட் மல்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முன்கூட்டியே பதவி விலகுவதற்கான காரணம் எதுவும் இந்தப் பதிவுகளில் குறிப்பிடவில்லை.

IPL_Entry_Point

டாபிக்ஸ்