தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  "மேகாலயா, நாகாலாந்தில் பாஜக வெற்றியை உறுதி செய்தால்…"-பிரதமரின் வாக்குறுதிகள்

"மேகாலயா, நாகாலாந்தில் பாஜக வெற்றியை உறுதி செய்தால்…"-பிரதமரின் வாக்குறுதிகள்

Manigandan K T HT Tamil
Feb 16, 2023 11:11 AM IST

Prime Minister Modi: நாகாலாந்து தேர்தல் அறிக்கையில், மாநிலத்திற்கு சிறப்பு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என பாஜக குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி (@narendramodi)

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை மேகாலயாவுக்கும் மற்றும் செவ்வாய்க்கிழமை நாகாலாந்துக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜக மேகாலயாவுக்கு அனைத்து வகையான வளர்ச்சியை வழங்கும். இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சியில் கவனம் செலுத்தும். எங்கள் அறிக்கை மாநிலத்திற்கான எங்கள் திட்டத்தை விவரிக்கிறது.

நாகாலாந்தின் வளர்ச்சிப் பாதையில் மேலும் உத்வேகம் சேர்ப்பதில் எங்கள் கட்சி முழுமையாக உறுதிபூண்டுள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் அது பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேகாலயாவுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

உணவகம் மூலம் 5 ரூபாய் உணவு, முதுகலை வரை பெண்களுக்கு இலவசக் கல்வி, கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 அரசுப் பத்திரம் ஆகிய வாக்குறுதிகளையும் பாஜக அளித்துள்ளது.

நாகாலாந்து தேர்தல் அறிக்கையில், மாநிலத்திற்கு சிறப்பு தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என பாஜக குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2 தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்