vinayaga chaturthi: தெலங்கானாவில் விநாயகர் கோயில் லட்டு ரூ.45 லட்சத்துக்கு ஏலம்
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு விநாயகர் கோயிலில் 45 லட்சம் ரூபாய்க்கு ஒரு லட்டு ஏலம் விடப்பட்டது.
ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள விநாயகர் கோயிலில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் பிரசித்தி பெற்ற மரகத ஸ்ரீலட்சுமி விநாயகர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் ஏலம் விடப்படும். இதில் கிடைக்கும் தொகை, கோயில் மேம்பாட்டு பணிக்கு செலவிடப்படும்.இதேபோல் இந்தாண்டு 12 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டு, நேற்று ஏலம் விடப்பட்டது.
தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கட ராவ் - கீதாப்ரியா தம்பதி, இதை 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.
இது குறித்து வெங்கட ராவ் கூறியதாவது:
இந்த லட்டை ஏலம் எடுத்தால் விநாயகரின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காகவே ஏலம் எடுத்துள்ளோம். எங்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் ஆசி கிடைக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
டாபிக்ஸ்