தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra : ஆந்திராவில் மின்னல் தாக்கி கணவன் பலி.. மனைவி கண்முன்னே நடந்த சோகம்!

Andhra : ஆந்திராவில் மின்னல் தாக்கி கணவன் பலி.. மனைவி கண்முன்னே நடந்த சோகம்!

Divya Sekar HT Tamil
Apr 23, 2023 12:00 PM IST

ஆந்திராவில் இரு வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு (கோப்புப்படம்)
மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் ஆலங்கட்டி மழையும் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் மழை இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. ஆலகட்டி மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இரு வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயாநகர மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் ( 47). கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமணம்மா. கணவன், மனைவி இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை வேலைக்கு சென்றனர். மதியம் கணவன், மனைவி இருவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசியது. பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார். அப்போது அப்பா ராவ் மீது திடீரென மின்னல் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.கணவன் கண்முன்னே இறந்ததை பார்த்து மனைவி கதறி துடித்தது கண்போர் கண்களை குளமாக்கியது.

இதேபோல அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் போடுராஜூ குன்னாலு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாயுடு (51). இவர் கிராமத்துக்கு அருகில் உள்ள மலை உச்சிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்