தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gun Shot: பள்ளியில் பதற வைக்கும் துப்பாக்கி சூடு-9 பேர் பரிதாப பலி எங்க தெரியுமா?

Gun Shot: பள்ளியில் பதற வைக்கும் துப்பாக்கி சூடு-9 பேர் பரிதாப பலி எங்க தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
May 04, 2023 12:00 PM IST

Serbia: காவல்துறையினர் நடத்திய விசாணையில் துப்பாக்கி கூட்டில் ஈடுபட்ட மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி கூட்டில் அதிர்ந்த மாணவி
துப்பாக்கி கூட்டில் அதிர்ந்த மாணவி (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

செர்பியா நாட்டின் தலைநகரான பல்கிரெடி மாகாணத்தில் விரகார் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளியில் இருந்தனர். அப்போது பாடம் கற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 14 வயது நிரம்பிய 7ம் வகுப்பு மாணவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினார். ஆசிரியர் மாணவர்கள் என கண்ணில் கண்ட அனைவரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டான். இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கும் இங்கும் ஓடினர். இந்த துப்பாக்கி கூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என 9 பேர் பலியாகினர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்படுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாணையில் துப்பாக்கி கூட்டில் ஈடுபட்ட மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் அந்த மாணவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் நாளுக்கு நாள் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெறுவது தொடர் கதையாக மாறி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் துப்பாக்கி வணிகத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டியது அவசியம் என உலக அளவில் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்