Tamil News  /  Nation And-world  /  Tamil Latest News Updates

இன்றைய முக்கியச் செய்திகள்

Tamil Latest News Updates: யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி

10:49 ISTHT Tamil Desk
10:49 IST

இன்றைய (26.05.2023) முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Fri, 26 May 202314:56 IST

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதுதொடர்பான உத்தரவை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்

Fri, 26 May 202313:17 IST

20 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மீனம்பாக்கம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது

Fri, 26 May 202313:12 IST

செந்தில் பாலாஜி தம்பி இல்லத்தில் சோதனை நிறைவு

சென்னை மந்தைவெளியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடந்து வந்த வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தகவல்

Fri, 26 May 202313:11 IST

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர்

ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வரும் ஜூன் 11ஆம் தேதி கருணாநிதி சிலையையும் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Fri, 26 May 202313:00 IST

யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி

மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நேற்றிரவு சொகுசுகார் மோதி பத்மாவதி என்ற மூதாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானுக்கு சொந்தமனாது என்று தெரிந்த வந்த நிலையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த காரில் இர்பான் இருந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Fri, 26 May 202311:22 IST

ஏழுமலையானை தரிசிக்க 36 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமையானை தரிசிக்க 36 மணி நேரத்திற்கு மேலாக பக்த்கர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். வார விடுமுறை நெருங்குவதல் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Fri, 26 May 202311:20 IST

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் கடலூர், அரியலூர், தருமபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

Fri, 26 May 202311:12 IST

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய மேலும் 3 இடங்களில் சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். பவுத்திரம், காந்தி கிராமம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் சோதனை

Fri, 26 May 202311:08 IST

கூடுதல் விலைக்கு மதுவிற்க கூடாது - செந்தில் பாலாஜி

மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுரை

Fri, 26 May 202310:16 IST

ஆருத்ரா வழக்கில் 8 பேர் கைது - ஐஜி 

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் கிளை பொறுப்பாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்  ஹிஜாவு வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; முக்கிய வழக்குகளான ஆருத்ரா கோல்ட் டிரேடிங், ஹிஜாவு அசோசியேட்ஸ், LNS - IFS, AMRO KINGS, CVRS நிதி நிறுவனங்கள் மோசடிகள் மீதான புலன் விசாரணைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக  ஐ.ஜி ஆசியம்மாள் பேட்டி

Fri, 26 May 20239:43 IST

9ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

Fri, 26 May 20239:42 IST

செங்கோல் குறித்த சர்ச்சை - திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்

செங்கோல் சர்ச்சை தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் அளித்துள்ள விளக்கத்தில், அட்சி மாற்றத்தின் போது நிகழ்ந்த சடங்குகள் ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் ஆதாயங்களுக்காக செங்கோல் நிகழ்வை பொய், போலி என்று கூறுவது வருத்தத்திற்குரியது. ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தை குறைக்க முயல்தல் தவிர்க்கப்பட வேண்டியவை. முறையான சடங்குகள் செய்து செங்கோலை ஆதீன கர்த்தர், நேருவிடம் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 26 May 20239:01 IST

ஐடி அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி

கரூர் வருமான வரிச்சோதனையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் 4 வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.

Fri, 26 May 20239:00 IST

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புக்குத் தடையில்லை

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Fri, 26 May 20238:17 IST

ஐடி ரெய்டு எங்களுக்கு புதிதல்ல

எனது சகோதரர் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. என் வீட்டில் சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஐடி ரெய்டு எங்களுக்கு புதிதல்ல; சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக் கூடாது; முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Fri, 26 May 20238:13 IST

செந்தில் பாலாஜியை அண்ணாமலை டார்கெட் செய்கிறார் - ஆர்எஸ் பாரதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு டார்கெட் செய்கிறார் என ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Fri, 26 May 20238:12 IST

இபிஎஸ் மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

எடப்பாடி பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.

Fri, 26 May 20237:16 IST

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

Fri, 26 May 20237:13 IST

எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை - செந்தில் பாலாஜி

எனது தம்பி மற்றும் தம்பிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் சோதனை நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Fri, 26 May 20237:12 IST

ஐடி ரெய்டு தற்காலிகமாக நிறுத்தம்

கரூரில் திமுகவினர் தடுத்ததால் வருமானவரித் துறை சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Fri, 26 May 20237:01 IST

சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமின்!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணை பிறப்பித்துள்ளது. 

Fri, 26 May 20236:20 IST

பள்ளிகள் திறக்கப்படும் நாளில், பாடப்புத்தகங்கள்!

"பள்ளிகள் திறக்கப்படும் நாளில், பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Fri, 26 May 20236:19 IST

இங்கிலாந்து ஒப்பந்தத்தை முறித்து கொண்ட ஜேசன் ராய்ஸ

அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து அணியுடனான மத்திய ஒப்பந்தத்தை ஜேசன் ராய் முறித்துக்கொண்டுள்ளார். இதை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

Fri, 26 May 20236:12 IST

ஒசாகா மாகாண துணை ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Fri, 26 May 20235:36 IST

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு !

தமிழ்நாட்டில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Fri, 26 May 20235:33 IST

ஐடி ரெய்டு குறித்து தகவல் இல்லை - கரூர் எஸ்.பி!

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் "ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை, சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கேட்பது வழக்கம். ஐடி ரெய்டு குறித்து தகவல் அறிந்து 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்" என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Fri, 26 May 20235:29 IST

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் விவகாரத்தில், "தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்; பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது" என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

Fri, 26 May 20235:26 IST

கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது!

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிரூத் இசையில் கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

கவின் படப்பிடிப்பு
கவின் படப்பிடிப்பு

Fri, 26 May 20235:11 IST

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களா? அன்புமணி ஆவேசம்!

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களை பயன்படுத்துவதா? கடலூர் மாநகராட்சி மேயர், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Fri, 26 May 20235:07 IST

கரூரில் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொள்ள வந்த வருமானவரித்துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது

கார் கண்ணாடி உடைக்கப்பட்டதை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அதிகாரியின் கார் கண்ணாடி உடைப்பு
அதிகாரியின் கார் கண்ணாடி உடைப்பு

Fri, 26 May 20235:04 IST

குடியரசு தலைவர் நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டுமென்பதே திமுக நிலைபாடு!

நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர்தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. உயர் பதவியில் உள்ள குடியரசு தலைவர் திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே திமுகவின் நிலைபாடு என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Fri, 26 May 20234:21 IST

சென்னையில் தங்கம் விலை குறைவு!

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சவரன் ரூ.44,840 க்கு விற்பனையாகிறது.

Fri, 26 May 20233:52 IST

ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதன் மூலம் திருப்போரூரில் டைசல் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது

Fri, 26 May 20233:12 IST

டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!

டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு. தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது

Fri, 26 May 20233:11 IST

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 14 வயது சிறுமியை காரில் கடத்திக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜேஷ் குட்டன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Fri, 26 May 20233:08 IST

வருமான வரித்துறை சோதனை -காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

Fri, 26 May 20233:06 IST

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ஜப்பான் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் AIRBAG INFLATOR தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

Fri, 26 May 20233:04 IST

75 நாணயத்தை வெளியிடவுள்ள ஒன்றிய அரசு

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக, 75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு.

Fri, 26 May 20232:52 IST

பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனேஷ்வரை பிடிக்க தனிப்படை!

நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனேஷ்வரை பிடிக்க தனிப்படை அமைப்பு. உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Fri, 26 May 20232:40 IST

அமைச்சர் செந்தில்பாலாஜி இடங்களில் வருமானவரி சோதனை 

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடுகளில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை.

இன்று காலை முதல் சென்னை, கரூர், கோவை உட்பட அவர் தொடர்புடைய 40 இடங்களில் சுமார் 300 அதிகாரிகள் சோதனை.

Fri, 26 May 20232:29 IST

ஐபிஎல் அப்டேட்! மும்பை - குஜராத் அணிகள் மோதல்

ரோஹித் ஷர்மா தலைமையில் ப்ளே ஆஃப் சுற்றில் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 11 போட்டிகளில் வென்று மும்மை அணி அசத்தியுள்ளது.

Fri, 26 May 20232:08 IST

தோனியை பாராட்டிய கங்குலி

தோனி அற்புதமானவர், தனது கேப்டன்சி மூலம் பெரிய தொடர்களை எப்படி வெல்வது என செய்து காட்டினார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளார்.

Fri, 26 May 20231:50 IST

டாஸ்மாக் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு

குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன் மணி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். காயமடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றொருவனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Fri, 26 May 20231:47 IST

இம்ரான்கான் நாட்டைவிட்டு வெளியேற தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி நாட்டைவிட்டு வெளியேற அந்நதட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. கடந்த 9ம் தேதி நடந்த இம்ரானின் கைதை கண்டித்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Fri, 26 May 20231:24 IST

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2301 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 717 மில்லியன் கனஅடியாக உள்ளது

கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 462 மில்லியன் கனஅடியாக உள்ளது

Fri, 26 May 20231:04 IST

கொடைக்கானலில் மலர் கண்காட்சி 

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று முதல் 8 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 26 May 20231:02 IST

10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் 

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பிற்பகல் முதல் பணிகள் துவங்குகின்றன.

Fri, 26 May 20230:53 IST

ஐபிஎல் இன்றைய போட்டி 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார்? இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் இன்று பலப்பரிட்சை செய்கின்றன.

Fri, 26 May 20230:52 IST

நாடாளுமன்ற வழக்கு இன்று அவசர விசாரணை 

நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவரே திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

Fri, 26 May 20230:51 IST

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகிறதா? - இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Fri, 26 May 20230:46 IST

370வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை 

சென்னையில் இன்று (மே 26) பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 370வது நாளாக அதே விலையில் பெட்ரோல், டீசல் விலை விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று (மே 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கும் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

Fri, 26 May 20230:44 IST

அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது வாட்ஸ் அப்

டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போல் வாட்ஸ் அப் செயலியிலும் 'User Name' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாட்ஸ் அப் பயனாளர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும் நிலையில், பயனர்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் இந்த அப்டேட் என டெக்னாலஜி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Fri, 26 May 20230:44 IST

ரூ.140 கோடிக்கு ஏலம் பேன திப்பு சுல்தான் வாள்!

மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள கலைப்பொருட்களை ஏலம் விடும் போன்ஹாம்ஸ் என்ற நிறுவனம் நடத்தியி இந்த ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.

பகிர்வு கட்டுரை