தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: ராகுலை தண்டித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்-உச்சநீதிமன்றம் அதிரடி

Rahul Gandhi: ராகுலை தண்டித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்-உச்சநீதிமன்றம் அதிரடி

Pandeeswari Gurusamy HT Tamil
May 12, 2023 11:44 AM IST

Supreme Court: நீதிபதி ஹரீஷ் வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்தி வைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

ராகுல் காந்திக்கு 2 அண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி ஹரீஷ் வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்தி வைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி மூப்பை பின்பற்றாமல் இட ஒதுக்கீடு மூலமாக பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தொரடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாகப் பேசினார் என பாஜக எம்எல்ஏ ஒருவர் குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் மோடி என்ற சமூகத்தை அவதூறாகப் பேசினார் என சூரத் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேசமயம் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி அவகாசம் வழங்கி முப்பது நாட்கள் ஜாமீன் வழங்கியது. இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இதனிடையே ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மா உள்ளிட்டோருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு வழங்கியது. நீதிபதிகளுக்கான பதவி உயர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 பேருக்கு குஜராத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வு கொடுத்தது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இத்தகைய பதவி உயர்வு அறிவிக்கை சட்டவிரோதமானது; நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என அதிரடியான உத்தரவை பிறப்பித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்