தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  P.chidambaram: ’மோடி அரசு தலை நிமிர்ந்து நிற்க Upa அரசின் தோளில் நிற்பதுதான் காரணம்’ ப.சிதம்பரம்!

P.Chidambaram: ’மோடி அரசு தலை நிமிர்ந்து நிற்க UPA அரசின் தோளில் நிற்பதுதான் காரணம்’ ப.சிதம்பரம்!

Kathiravan V HT Tamil
Jun 26, 2023 12:30 PM IST

பால், தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை எட்டியதன் பெருமையை நிதியமைச்சர் கூறுகிறார், இந்த தரவரிசைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டவை என்றும், "நாங்கள் அந்த தரங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம்" என்றும் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

"மாண்புமிகு நிதியமைச்சர் மோடி அரசின் சாதனைகள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் மேற்கோள் காட்டிய பல எடுத்துக்காட்டுகள் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் உண்மையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வழக்கில் தோற்றதற்கு ஐந்து உதாரணங்களை நிதியமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார், சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 

"குறைந்தபட்சம் மூன்றில் அவர் தவறு செய்கிறார்: நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு முன்பே, உச்சநீதிமன்றம் முத்தலாக் சட்டவிரோதமானது என்று அறிவித்தது. 370வது பிரிவு இன்னும் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படவில்லை. GST சட்டங்களின் கீழ் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன," என குறிப்பிட்டுள்ளார்.

பால், தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை எட்டியதன் பெருமையை நிதியமைச்சர் கூறுகிறார், இந்த தரவரிசைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டவை என்றும், "நாங்கள் அந்த தரங்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம்" என்றும் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

மேலும் "மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் நேரடிப் பலன் பரிமாற்றத்திற்குக் கிரெடிட் கோருகிறார். ஆதார் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும், DBT-(நேரடி பலன் பறிமாற்றம்)இன் கீழ் முதல் பரிமாற்றங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் செய்யப்பட்டது என்பதையும்  ஆவர் மறந்துவிட்டார்" என்று சிதம்பரம் கூறினார்.

11.72 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாக நிதியமைச்சர் பெருமிதம் கொள்கிறார். அவற்றில் எத்தனை பயன்படுத்தப்படாமல் உள்ளன மற்றும் தண்ணீர் இல்லாததால் பயன்படுத்த முடியாதவை என்று தனது சொந்த அரசாங்கத்தின் அறிக்கைகளைப் படிக்க வேண்டும் என்று என்று கூறி உள்ள ப.சிதம்பரம், "ஒவ்வொரு அரசும் சாதனை படைக்கும். மோடி அரசும் அப்படித்தான். சில இடங்களில் மோடி அரசு தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசின் தோளில் நிற்பதுதான் காரணம்" என்று தெரிவித்துள்ளர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்