தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rrr Movie: ‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு ஆட்டம் – அசத்தும் தென்கொரிய தூதர்

RRR Movie: ‘நாட்டு நாட்டு’ பாட்டுக்கு ஆட்டம் – அசத்தும் தென்கொரிய தூதர்

Priyadarshini R HT Tamil
Feb 26, 2023 11:34 AM IST

Nattu Nattu Song and South korea: ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய கொரிய தூதரக தூதர் மற்றும் அலுவலர்கள். அவர்கள் டிவிட்டடரில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போடும் தென்கொரிய தூதர்
நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போடும் தென்கொரிய தூதர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்ற நாட்டு நாட்டு பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றது. சிறந்த அசல் பாடலுக்கான விருது பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களை கடந்து வெற்றி பெற்றது. அந்த பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

டைட்டானிக், அவதார் ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனையும் சந்தித்தபோது படம் குறித்து 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜேம்ஸ் கேமரூன் ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்தாதாகவும், அவருக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது. இதுமட்டுமல்ல தன்னுடைய மனைவி சுசிக்கும் படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்து அவருடன் மீண்டும் ஒருமுறை படத்தை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு, நாட்டு பாடலுக்கு டெல்லியில் உள்ள தென்கொரிய தூதரக ஊழியர்கள் நடனமாடிய வீடியோவை அந்த தூதரகமே வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

தென் கொரிய தூதரகம் நாட்டு நாட்டு ஆர்ஆர்ஆர் டான்ஸ் கவர் – இந்தியாவின் தென்கொரிய தூதரகம் என்று கூறுகிறது.

உங்களுக்கு நாட்டு தெரியுமா? தென் கொரிய தூதர் சங் ஜெபாக், தூதரக ஊழியர்களின் நாட்டு நாட்டு பாடலை பகிர்கிறோம் என்று நேற்று டிவீட் செய்துள்ளார்.

53 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கொரியன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தூதரக ஊழியர்கள் நடனமாடியுள்ளார்கள். இந்தியாவுக்கான தென்கொரிய தூதர் சங் ஜேபாக்கியும் தோன்றுகிறார். அந்தப்பாடலில் ராம் சரண் தேஜாவும், ஜீனியர் என்டிஆரும் சேர்ந்து ஆடும் நடன அசைவுகளை ஆடியுள்ளார்.

இதுகுறித்து சிலர் பின்னூட்டமும் செய்துள்ளனர். அதில் ஒருவர், தூதர் சங்கிற்கு ஆஸ்கர் விருதுகொடுங்கள் என்று ஜீனியர் என்டிஆரை டேக் செய்து டிவீட் செய்துள்ளார்கள்.

மற்றொருவர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கொரியன் தூதரகத்திற்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் நீங்கள் 3 பேரும் கடைசி வரை கலக்கிவிட்டீர்கள். சோர்ந்துவிடவேயில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்பாடலை ராகுல் சிப்லிகுஞ்ஜ் மற்றும் காலபைரவா ஆகியோர் பாடியுள்ளார். இப்பாடலுக்கு நடன அசைவுகளை அமைத்தவர் பிரேம் ரக்ஷிதா.

IPL_Entry_Point

டாபிக்ஸ்