தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Smartphone Sales Went Down Slow Globally Other Than Apple Iphone

Smartphone sales: ஐபோன்கள் தவிர மற்ற ஸ்மார்ட்போன்கள் விற்பனை சரிவு!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 01, 2022 11:53 PM IST

ஸ்மார்ட்போன்களின் விற்பனை வழக்கத்தை விட சரிந்து வருவதாகவும் பழைய நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் வரை ஆகும் எனவும் புள்ளிவிவர தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐபோன்கள் தவிர சரிவில் இதர ஸ்மார்ட்போன் விற்பனை
ஐபோன்கள் தவிர சரிவில் இதர ஸ்மார்ட்போன் விற்பனை (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

உலக முழுவதும் மொபை போன்கள் விற்பனை மார்க்கெட் இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் சரிவை சந்தித்துள்ளது.

ஜூன் காலாண்டில் 2 சதவீதம் என 95.8 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இந்த சரிவிலும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி Counterpoint Smartphone Camera Tracker கூறியுள்ள தகவலின் அடிப்படையில், 2022இல் உலகளாவிய ஸ்மார்ட்போன் CMOS இமேஜ் சென்சார் (CIS) ஏற்றுமதிகள் 14% குறைந்து சுமார் 2.4 பில்லியன் யூனிட்களாக உள்ளது. இதற்கு மந்தமான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி மற்றும் மல்டி-கேமரா டிரெண்ட் மந்தநிலை ஆகியவை காரணமாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையே Counterpoint Research மேற்கொண்ட சமீபத்திய புள்ளிவிவரப்படி உலகம் முழுவதும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்படும் சீனாவில் அவ்வப்போது அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவற்றின் காரணமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சரிவு கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட இந்த 2 காரணிகளும் ஏற்றுமதியை பாதிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை (Average selling price) 6 சதவீதம் அதிகரித்த போதிலும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் இந்த மந்த விற்பனை நிலை குறித்து மூத்த ஆய்வாளர் ஹர்மீத் சிங் வாலியா கூறும்போது, "சாம்சங், ஆப்பிள் போன்ற பிராண்டுகள் ஒட்டுமொத்த சராசரி விற்பனை விலை வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன. இவற்றுடன் சில சீன பிராண்டுகளும் கூட கடந்த ஆண்டில் அதிக சராசரி விற்பனை மாற்றத்தை நோக்கி செயல்பட்டது. இதனால் ஸ்மார்ட்போன்கள் விற்பனையின் ஒட்டுமொத்த இயக்க லாபம்ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வருடாந்திர வளர்ச்சியை கண்டுள்ளது.

இருப்பினும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் QoQ 26 சதவீதம் குறைந்த பிறகு இயக்க லாபம் 29 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த காலாண்டில் 46.5 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில் பொருளாதார சரிவிலிருந்து மீளும் விதமாக ஐபோன்கள் சுழற்சி முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்து காணப்படும் பணவீக்க அளவுகள் காரணமாக ஸ்மார்ட்போன் மார்க்கெட் தொற்றுநோய்க்கு முந்தைய இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.

IPL_Entry_Point