School Student: ஹேர் ஸ்டைல் சரியில்ல.. பள்ளி சிறுவன் தற்கொலை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  School Student: ஹேர் ஸ்டைல் சரியில்ல.. பள்ளி சிறுவன் தற்கொலை

School Student: ஹேர் ஸ்டைல் சரியில்ல.. பள்ளி சிறுவன் தற்கொலை

Aarthi V HT Tamil Published Apr 07, 2023 01:15 PM IST
Aarthi V HT Tamil
Published Apr 07, 2023 01:15 PM IST

முடி வெட்டியது பிடிக்காததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை
தற்கொலை

இவர் கடந்த செவ்வாய்கிழமை அன்று தனது உறவுக்கார இளைஞருடன் முடி திருத்தம் செய்ய சலூனுக்கு சென்று இருந்தான். கடைக்காரனிடம் தனக்கு ஸ்டைலாக ஹேர்கட் செய்யும் படி சொல்லி உள்ளான். ஆனால், சிறுவன் எதிர்பார்த்தபடி ஹேர் ஸ்டைல் வரவில்லை. அதற்கு பதிலாக முடியை அவர் சிறியதாக வெட்டியுள்ளார். இதனால் சிறுவன் வருத்தம் அடைந்து உள்ளான்.

வீட்டிற்கு வந்தும், சத்ருகன் பதக் ( 13 ) ​​​​தனது தலைமுடி சிறியதாக வெட்டப்பட்டு இருப்பதை கண்டு மன உளைச்சலில் இருந்து உள்ளார். அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் சிறுவன் சமாதானம் ஆகவில்லை.

இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் தூங்க சென்ற பின் இரவு 11.30 மணி அளவில் சிறுவன் தனது வீட்டின் 16 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை பார்த்து பதறிப்போன செக்யூரிட்டி உடனே வீட்டிற்கு தகவல் கொடுத்து, சிறுவனை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.