தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul : தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக வயநாடில் ராகுல் காந்தி

Rahul : தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக வயநாடில் ராகுல் காந்தி

Priyadarshini R HT Tamil
Apr 11, 2023 11:36 AM IST

Vayanad Visit : எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக ராகுல்காந்தி வயநாடு செல்கிறார். 2019ம் ஆண்டு இவர் இந்த தொகுதியில் இருந்துதான் 4 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல் காந்தி - கோப்புப்படம்
ராகுல் காந்தி - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

டி.சித்திக், கேரள சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கூறுகையில், ராகுல் காந்தி இன்று சாலையில் பேரணி செல்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளதாகவும், பிரியங்கா காந்தி வதேராவும் அதில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தகுதி நீக்கத்துக்கு எதிராக உள்ள பலத்தை காட்டும் விதமாக அந்த நிகழ்வு அமையும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதுதான் வயநாட்டில் போராட்டத்திற்கு காரணம். இந்த சாலை பேரணியில், கேரள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்வார்கள். இதில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்சிக்கொடிக்கு பதில் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியிருப்பார்கள்.

நாட்டின் ஜனநாயக மரபை மீட்டெடுக்கும் விதமாக இது அமையும். இந்த நிகழ்வு நாட்டின் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உதவும். தொழிலாளர்களும் ராகுல் காந்திக்கு தங்களின் ஆதரவை கொடுப்பார்கள். இது ஒரு மாபெரும் நிகழ்வாக இருக்கும் என்று அவர் கூறினார். மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ராகுல் காந்தி ஏற்கனவே அவருக்கு வாக்களித்த மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்த சூழ்நிலையை விளக்கி, இந்த திடீர் தகுதி நீக்கம் மற்றும் மோடி அரசின் இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து நாம் போராட வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ராகுல் காந்தியின் கடிதத்தை வயநாட்டின் வாக்காளர்களிடம் ஒப்படைத்தனர்.

ராகுல் காந்தி கண்ணுர் ஏர்போர்ட்டில் இருந்த வயநாடு செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு பின்னர் தேர்தல் களமான கர்நாடகாவுக்குச் செல்கிறார்.

கடந்த மாதம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்ட்ட தகவல் கிடைத்ததும், காங்கிரஸ் தொண்டர்கள் தெருக்களில் வந்து போராடினார்கள். மோடி மற்றும் மத்திய அரசை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்