தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Harley Davidson X500: இது என் கோட்டை - உக்காந்து பாருங்க தெரியும்..!

Harley Davidson X500: இது என் கோட்டை - உக்காந்து பாருங்க தெரியும்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 23, 2023 12:03 PM IST

ஹார்லே டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மாடலான Harley Davidson X500 பைக் வெளியிடப்பட்டுள்ளது.

ஹார்லே டேவிட்சன் X500
ஹார்லே டேவிட்சன் X500

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக புதிய நிறுவனங்களும் இந்தியாவில் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

அதே சமயம் தங்களது தயாரிப்புகளையும் அவ்வப்போது பெரிய நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த QJ மோட்டார் நிறுவனமும் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் சேர்ந்து புதிய பைக் போன்றே உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனத்தின் பேரில் X 350 என்ற பைக் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய மாடலாக X500 பைக் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த QJ நிறுவனம், அமெரிக்காவின் ஹார்லே டேவிட்சன் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது.

அதே சமயம் கீவே, பெனலி, எம்வி போன்ற பல நிறுவனங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் வைத்துள்ளது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹார்லி டேவிட்சன் X500 பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

சிறப்பம்சங்கள்

  • இந்த பைக்கில் 500 Parallel Twin என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 47.5HP பவர் மற்றும் 46 NM டார்க் இழுவிசை கொண்டதாகும்.
  • இதில் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல் முறையாக Parallel Twin பைக்குகளான X 350 மற்றும் X 500 பைக்குகளை உருவாக்கியுள்ளது.
  • இதனை இந்நிறுவனம் Steel Tube Frame மூலம் உருவாக்கியுள்ளது. குறிப்பாக இதில் 50mm USD போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஸன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் பாதுகாப்புக்காக 17 இன்ச் Cast அலாய் வீல், 13 லிட்டர் பியூயல் டேங்க், 208 kg எடை, டூயல் சேனல் ABS போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த பைக் மாடர்ன் மற்றும் ரெட்ரோ என இரண்டும் கலந்த ஒரு டிசைனாக வெளியாகியுள்ளது.
  • இதில் இரண்டு பக்கத்திலும் LED ஹெட் லைட், டைல் லைட், DRLS, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த பைக்கின் விலையானது 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஹார்லே டேவிட்சன் (Harley davidson) பைக்களிலேயே மிகவும் விலை குறைந்த பைக்குகள் ஆகும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்