தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi's Egypt Visit: ’கேம் சேஞ்சர்’ ஆக அமையும் பிரதமரின் எகிப்து பயணம்!

PM Modi's Egypt visit: ’கேம் சேஞ்சர்’ ஆக அமையும் பிரதமரின் எகிப்து பயணம்!

Kathiravan V HT Tamil
Jun 25, 2023 02:08 PM IST

எகிப்துடனான சீனாவின் இருதரப்பு வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, இது 2021-22ல் இந்தியாவின் 7.26 பில்லியன் டாலர்களை விட இருமடங்காகும்.

எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி
எகிப்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பிரதமரின் எகிப்து பயணம் வட ஆப்ரிக நாடுகளில் இந்தியாவின் முதலீட்டை கணிசமான அதிகரிக்க வழி வகுக்கும் மற்றும் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் எகிப்து நுழைவதற்கான ஏணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் எகிப்து நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசி கலந்து கொண்டிருந்தார். எல்-சிசியின் ஜனவரி பயணத்தின் போது இரு தரப்பும் ஏற்கனவே ஒரு மூலோபாய நிலைக்கு உயர்த்தியிருந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பயணம் பார்க்கப்படுகிறது.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, வரும் நாட்களில் இருதரப்பு உறவுகள் எவ்வாறு விரிவடையும் என்பதற்கான வரையறைகளையும் இது வெளிப்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெளியுறவு அமைச்சகத்தின் (எம்இஏ) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "எகிப்து ஜனாதிபதி சிசியின் இந்தியப் பயணத்தின் ஆறு மாதங்களுக்குள் இது மிக விரைவான, பரஸ்பர பயணம். இந்த பயணம் தொடர்ச்சியான வேகத்தை மட்டும் உறுதிப்படுத்தாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாட்டின் புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் உதவும்" என தெரிவித்துள்ளார்.

எகிப்து அதிபர் எல்-சிசி இந்தியாவுக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார். எகிப்து நாட்டில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிப்பதைக் கண்காணித்துள்ள நிலையில், கெய்ரோ வழியாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (மெனா) பகுதிக்கு ஆழமான அணுகலை புது தில்லி எதிர்பார்க்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, எகிப்துடனான சீனாவின் இருதரப்பு வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, இது 2021-22ல் இந்தியாவின் 7.26 பில்லியன் டாலர்களை விட இருமடங்காகும். சமீபத்திய இருதரப்பு வர்த்தகம் ஏப்ரல் 22 முதல் ஜனவரி 23 வரை 5.18 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்