தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pakistan: பாகிஸ்தான் ஆளும் கட்சியில் இருந்து அப்பாஸி ராஜிநாமா.. காரணம் என்ன?

Pakistan: பாகிஸ்தான் ஆளும் கட்சியில் இருந்து அப்பாஸி ராஜிநாமா.. காரணம் என்ன?

Manigandan K T HT Tamil
Feb 01, 2023 01:53 PM IST

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, PML-N இன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அப்பாஸி, பிரதமர் பதவியை அலங்கரித்தார்.

பாக்., முன்னாள் பிரதமர் அப்பாஸி
பாக்., முன்னாள் பிரதமர் அப்பாஸி

ட்ரெண்டிங் செய்திகள்

மரியம் நவாஸை கட்சியின் தலைமை அமைப்பாளராகவும், மூத்த துணைத் தலைவராகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவி உயர்வு அளித்ததை அடுத்து அப்பாசி பதவி விலக முடிவு செய்தார் என்று அக்கட்சியின் முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) மூத்த துணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி புதன்கிழமை ராஜினாமா செய்ததாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ARY நியூஸ் தெரிவித்துள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, PML-N இன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அப்பாசி, பிரதமர் பதவியை அலங்கரித்தார்.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மூத்த துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் இன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவருக்கு அனுப்பினார்.

அவரை அணுகியபோது, ​​​​அப்பாசி தனது ராஜினாமா குறித்து ஊடகங்களுக்கு எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை.

அவரது தந்தை நவாஸ் ஷெரீப் மற்றும் தற்போதைய பிரதமராக இருக்கும் அவரது மாமா ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்குப் பிறகு கட்சியில் மூன்றாவது சக்திவாய்ந்த நபராக மரியம் இருக்கிறார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் கூறுகையில், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும், அரசியலில் முக்கியப் பொறுப்புகளுக்கும் ஷெரீஃபின் குடும்பத்தினருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார்.

ஷெபாஸ் ஷெரீபின் அமைச்சரவையில் எந்தப் பொறுப்பையும் அப்பாஸி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PML-N தலைவர் பதவியை வகிக்கும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கட்சியின் அலுவலகத்தில் இருந்து அப்பாசியின் ராஜினாமா கடிதத்தை கிடைக்கப் பெற்றுள்ளார். ஆனால் இன்னும் அதை ஏற்கவில்லை என்று PML-N வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று ARY நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்