தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Missing Girls : இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்.. மத்திய பிரதேசம் முதல் இடம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Missing Girls : இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்.. மத்திய பிரதேசம் முதல் இடம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Divya Sekar HT Tamil
Jul 31, 2023 11:08 AM IST

இந்தியாவில் 2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,61,648 பெண்கள், 2,51,430 சிறுமிகள் என 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2019 முதல் 2021 வரையிலான 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10,61,648 பெண்கள், 2,51,430 சிறுமிகள் என 13.13 லட்சம் பேர் காணாமல் போயுள்ளனர்.

இதில் 2021ல் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளனர். இந்த காலகட்டத்தில் 18 வயதுக்கும் கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 57 ஆயிரம் பெண்கள் மாயமாகி உள்ளனர். யூனியன் பிரதேசங்களில் தலைநகர் டெல்லியில் தான் அதிக அளவில் பெண்களும் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போன பெண்கள் எண்ணிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அடுத்து ஒடிசாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

2019 முதல் 2021 வரை வரையிலான காலக்கட்டத்தில் மத்திய பிரதேசத்தில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் 1,56,905 பெண்களும், 36,666 சிறுமிகளும் மாயமாகி உள்ளனர்.மகாராஷ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.ஒடிசாவில் 70,222 பெண்களும், 16,649 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். சத்தீஸ்கரில் இருந்து 49,116 பெண்களும் 10,817 சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

டெல்லியில் 61 ஆயிரம் பெண்கள், சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் 2019-22 காலகட்டத்தில் 57,918 பெண்கள் , சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். 2019-2020இல் 19,658 பேரும், 2020-2021இல் 18,298 பெண்கள் சிறுமிகளும், 2021-2022இல் 23,964 பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்