தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala: வருது வருது நிபா வைரஸ் - இரண்டு பேர் பலி - ஹெல்த் அலெர்டில் கோழிக்கோடு!

Kerala: வருது வருது நிபா வைரஸ் - இரண்டு பேர் பலி - ஹெல்த் அலெர்டில் கோழிக்கோடு!

Marimuthu M HT Tamil
Sep 12, 2023 11:22 AM IST

கேரள மாநிலத்தில் நிபா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

நிபா வைரஸ்
நிபா வைரஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் முழு ஹெல்த் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு சுகாதார மேம்பாடு குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல், 2021ஆம் ஆண்டு, கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நிபா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார மையம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், நிபா வைரஸ் பழந்தின்னி வெளவால்களால் உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த நிபா வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச நோய்களுடன், இது காய்ச்சல், தசை வலி, தலைச்சுற்றல், குமட்டல் போன்றவற்றையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஆகையால், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இத்தகைய அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் ஹெல்த் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்