தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nia Raids: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

NIA Raids: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Karthikeyan S HT Tamil
Mar 14, 2023 11:05 AM IST

ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை.
என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

ட்ரெண்டிங் செய்திகள்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, குல்காம் மற்றும் ஷோபியான் ஆகிய இடங்களில் உள்ள சந்தேக நபர்களின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. என்ஐஏ குழுக்களுடன் உள்ளூர் போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான விசாரணை அமைப்பின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே புல்வாமாவில் வசிக்கும் பத்திரிகையாளர் ஒருவர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். அவர் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக ஹூரியத் தலைவர் காசி யாசிர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சால்வேஷன் இயக்கத்தின் தலைவர் ஜாஃபர் பட் ஆகியோரின் வீடுகளில் கடந்த வாரம் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பினருடன் யாருக்காவது தொடர்பு உள்ளதா என அறிய நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள நான்கு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதைப் போல் மகாராஷ்டிராவின் புனேவிலுள்ள ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர். 

புனேவில் தல்ஹா கான் என்பவரது வீட்டிலும், சியோனி பகுதியில் அக்ரம் சோனி என்பவரது வீடுகள், வணிக வளாகங்களிலும் இந்த சோதனை நடந்தது. இவர்கள் இருவருமே ஐஎஸ்கேபி அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஷோயிப் கான், அப்துல் அஜிஸ்கான் ஆகியோரது வீடுகள், வணிக வளாகங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து தொடர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்