தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  சிறுத்தை நடமாட்டம் எதிரொலி .. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி .. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Karthikeyan S HT Tamil
Aug 13, 2023 12:03 PM IST

திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை தூக்கி சென்று கொன்ற நிலையில், அலிப்பிரி மலைப்பாதையில் வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தேவல்தானம் முடிவெடுத்துள்ளது.

திருப்பதி
திருப்பதி

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூண்டு மற்றும் கேமராக்கள் வைத்து வனவிலங்கு நடமாட்டம் குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது சம்பந்தமாக திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடந்தது.

காவல்துறை, வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 40 அடி தூரத்துக்கு ஒரு பாதுகாவலர் என 100 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும், நடைபாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தங்களுடன் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். குழுக்களாக வரும் பக்தர்கள் சுவாமி பாடல்களை பாடியபடியும் 'கோவிந்தா.. கோவிந்தா' என கோஷமிட்டபடியும் நடைபாதையில் வரவேண்டும். இதனால் வன விலங்குகள் நடைபாதையில் வருவதை தடுக்க முடியும். அலிபிரி மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப் பாதைகளையும் மதியம் 2 அல்லது 3 மணிக்குள் மூடிவிடலாமா? என ஆலோசிக்கிறோம். விரைவில் இதுகுறித்து தெரிவிக்கப்படும்.

நடைபாதையில் வனவிலங்குகள் வருவதை தடுப்பது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு வனத்துறையினருடன் இணைந்து கம்பி வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்