தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mann Ki Baat : தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்? - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

Mann Ki Baat : தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்? - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

Divya Sekar HT Tamil
Aug 27, 2023 12:30 PM IST

இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்? என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், “சந்திரயான்-3 மிஷன் வெற்றி மிக பிரமாண்டமானது. இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் இந்த முழு பணியிலும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர், அவர்கள் திட்ட இயக்குனர் மற்றும் திட்ட மேலாளர் போன்ற பல முக்கிய பொறுப்புகளை கையாண்டுள்ளனர். சந்திரயான்-3 இன் வெற்றி மிகப் பெரியது, அதைப் பற்றி எவ்வளவு விவாதித்தாலும் போதாது

இந்தியாவின் சந்திராயன்-3 மிஷன் பெண் சக்திக்கு நேரடி உதாரணம். இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்? செப்டம்பர் மாதம் இந்தியாவின் திறனைக் காணப் போகிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனுக்குப் பிறகு நிலவில் மென்மையான தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடு இந்தியா.

ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இந்தியா முழுமையாக தயாராக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல உலக அமைப்புகளின் தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர்” என தெரிவித்தார். மன் கி பாத் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கி, அதன் 100வது அத்தியாயத்தை ஏப்ரல் 30, 2023 அன்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்