தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  District Court: செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

District Court: செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை

Manigandan K T HT Tamil
Feb 28, 2023 11:32 AM IST

Maharashtra: அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 392 (கொள்ளை), 394 (கொள்ளை செய்வதில் அல்லது செய்ய முயற்சிப்பதில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் MCOCA விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இரானி கும்பலைச் சேர்ந்த 2 பேருக்கு, மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான கடுமையான கட்டுப்பாடு சட்டத்தின் (MCOCA) விதிகளின் கீழ் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர், அவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங் காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சிறப்பு MCOCA நீதிமன்ற நீதிபதி A M Shete குற்றம் சாட்டப்பட்ட ஜாஃப்ரி (27) மற்றும் ஜாஃபர் அஜாம் சயீத் (35) ஆகியோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

2016-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி கல்யாண் நகரில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, ​​அவர்கள் இருவரையும் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் மற்றும் பிறரால் பிடிபட்டதாக சிறப்பு அரசு வழக்கறிஞர் சஞ்சய் மோர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 392 (கொள்ளை), 394 (கொள்ளை செய்வதில் அல்லது செய்ய முயற்சிப்பதில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் MCOCA விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் 13 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாக கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும், அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்