தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Leopard Attack: திருப்பதி மலைப் பாதையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

Leopard Attack: திருப்பதி மலைப் பாதையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

Karthikeyan S HT Tamil
Aug 14, 2023 11:41 AM IST

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் 6 வயது சிறுமி லட்ஷிதாவை தாக்கிக் கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

சிறுத்தை (கோப்புபடம்)
சிறுத்தை (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுமியை பல இடங்களில் தேடிய அவர்கள் பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும் போலீஸாரும் சிறுமியைதேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், மறுநாள் காலையில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டினர். சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் ஏழுமைலையான் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், திருமலைக்கு குழந்தைகளுடன் நடந்து செல்வோர் அவர்களை தனியே விடக்கூடாது என்றும் எல்லோரும் கூட்டமாக செல்ல வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இனி 100 பேர் கொண்ட கூட்டத்துடன் ஒரு பாதுகாவலரை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் மிருகங்கள் நடமாடும் பகுதிகளில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படுவர்கள் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்