தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Jackal Day 2024: வேட்டை விலங்கு! மனிதர்களை காப்பாற்றி சுற்று சூழலை சமநிலையுடன் வைக்கும் குள்ளநரிகள்

World Jackal Day 2024: வேட்டை விலங்கு! மனிதர்களை காப்பாற்றி சுற்று சூழலை சமநிலையுடன் வைக்கும் குள்ளநரிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 19, 2024 05:00 AM IST

குள்ளநரிகள் பெரும்பாலும் நாய் என தவறாக கருதப்படுகின்றன. வேட்டை விலங்காக இருந்து வரும் குள்ளநரிகள், சுற்றுசூழல் அமைப்பை நன்கு சமநிலையுடன், செழிப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

உலக குள்ளநரிகள் தினம் இன்று
உலக குள்ளநரிகள் தினம் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

ஆசியா, ஆப்பரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் இருந்து வரும் அரிய வகை உயிரினமான குள்ளநரிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் நாளாக இது இருந்து வருகிறது.

உலக குள்ளநரி தினம் 2024: முக்கியத்துவம்

குள்ளநரி பற்றி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் நாளாக இது இருந்து வருகிறது.

நரிகளில் மூன்று வெவ்வேறு இனங்கள் உள்ளன, அவற்றில் பொதுவான நரி, கருப்பு-கண்கள் கொண்ட நரி, பக்க-கோடுகள் நரிகள் ஆகும். சமூக விலங்குகளாக இருக்கும் இவை தனித்துவமான குழுக்களை உருவாக்குகின்றன.

குள்ளநரிகள் ஒரேயொரு ஜோடியுடன் மட்டும் வாழும் தன்மை கொண்ட விலங்கினமாக இருக்கிறது. அந்த ஜோடி குட்டியை ஒன்றாக துணை புரிகின்றன.

இந்த விலங்குகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா முழுவதும் பல்வேறு வாழ்விடங்களில் வாழவதற்கு உகந்ததாக தன்னை தக்கவமைத்து கொண்டுள்ளது.

உலக குள்ளநரி தினம் கொண்டாடுவது எப்படி?

குள்ளநரி பற்றிய படங்கள், டாக்குமென்டரிகளை நண்பர்களுடன் இணைந்து பார்த்து ரசிக்கலாம். அதன் வாழ்க்கை முறை, இயற்கை வாழ்விடங்களை தெரிந்து கொள்ளலாம்

குள்ளநரிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள அதுதொடர்பான புத்தகங்களை படிக்கலாம். இணையத்தின் வழியிலும் பிரவுசிங் செய்யலாம்.

குள்ளநரிகளைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். சுற்றுச்சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுவதன் மூலம், அவற்றை அழிந்து போகாமல் காப்பாற்ற முடியும்

குள்ளநரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  • குள்ளநரிகள் சிக்கலான சமூக அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களாகும். அவை தங்கள் குட்டிகளை வளர்ப்பதற்காக ஒரே ஜோடியாக இணைந்து வேலை செய்யும் விலங்கினமாக உள்ளது
  • இறந்த, அழுகி போன உயிரனங்களை இறையாக உண்ணும் குள்ளநரிகளால் சுற்றுச்சூழலை சுத்தமாகவும், மற்ற வனவிலங்குகளையும் மனிதர்களையும் கூட பாதிக்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது
  • குள்ளநரிகள் பெரும்பாலும் நாய் என தவறாக கருதப்படுகின்றன. இவை ஜெர்மன் ஷெப்பர்டு, நரிக்கும் இடையில் உள்ள குறுக்குவெட்டு போல தோற்றமளிப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றுகிறது
  • குள்ளநரி வேட்டையாடும் விலங்காக இருந்து வருகிறது. இது கூர்மையான பற்கள் மற்றும் மிகவும் இணக்கமான உணர்வுகளுடன் உள்ளது. இந்த விலங்கு சிறிய விலங்குகளான பறவைகள், ஊர்வன, பூச்சிகள் மற்றும் சிறிய பாலூட்டிகளை வேட்டையாடுகிறது.
  • குள்ளநரிகளின் எண்ணிக்கை நிலையாகவும், அதிகரிக்கவும் செய்தால் சுற்றுசூழல் அமைப்பு நன்கு சமநிலையுடன், செழிப்பாக இருக்கும் என்பதை குறிக்கிறது
  • விவசாயம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக குள்ளநரி வாழ்விட இழப்பு என் அச்சுறுத்தலா விஷயமாக உள்ளது. அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் சுருங்குவதால், குள்ளநரிகள் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன, இது மோதல்களுக்கு வழிவகுக்கிறது
  • சில பகுதிகளில் குள்ளநரிகள் வேட்டையாடப்படுகின்றன அல்லது விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. இது குள்ளநரி இணத்துக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பையும் சீர்குலைக்கும்
  • குள்ளநரிகளின் சுற்றுச்சூழல் பங்கு மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி மற்றவர்களுக்குக் கற்பிப்பது, அதன் மீதான எதிர்மறையான கருத்துக்களை மாற்றவும், அவற்றின் வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்