தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’Kgf தொகுதியை நாம கைப்பற்றனும்’ கர்நாடக தேர்தலில் களமிறங்கிய பா.ரஞ்சித்!

’KGF தொகுதியை நாம கைப்பற்றனும்’ கர்நாடக தேர்தலில் களமிறங்கிய பா.ரஞ்சித்!

Kathiravan V HT Tamil
Apr 07, 2023 11:03 AM IST

Karnataka Elections 2023: ”நம்மிடம் இருந்ததை நாம் இழந்து வருகிறோம். இழந்ததை திரும்ப கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயம் கேஜிஎஃப் தமிழர்களுக்கு உள்ளது” - பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா வரைபடம்
கர்நாடகா வரைபடம்

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளான மாண்டியா, கோலார், பெங்களூரு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

கர்நாடக சட்டப்பேரவை - விதான் சபா
கர்நாடக சட்டப்பேரவை - விதான் சபா

இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க வயல் பகுதியில் போட்டியிடும் இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் ராஜேந்திரனுக்கு தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கேஜிஎஃப் தமிழக மக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

ஏற்கெனவே நம்மிடம் இருந்ததை நாம் இழந்து வருகிறோம். இழந்ததை திரும்ப கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயம் கேஜிஎஃப் தமிழர்களுக்கு உள்ளது. நம்மிடம் உள்ள பலத்தை மீண்டும் நிரூபிக்க முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடவேக்கூடாது. இந்த முறை அண்ணனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும். நம்முடிய அரசியல் உரிமைகளை பெற சட்டமன்றம் அனுப்ப வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point