தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election: ’டபுள் எஞ்சின் அரசு’ என்றால் என்ன? பாஜக தொண்டர் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்

Karnataka Election: ’டபுள் எஞ்சின் அரசு’ என்றால் என்ன? பாஜக தொண்டர் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்

Kathiravan V HT Tamil
Apr 27, 2023 12:22 PM IST

பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு இருக்கும் இடங்களில் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. - பிரதமர் நரேந்திரமோடி

தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜக தொண்டர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி
தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் பாஜக தொண்டர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

"பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அணுகுமுறை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பாதை வரைபடத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. 

எங்கள் போட்டியாளர்களின் செயல்திட்டம் ஆட்சியைப் பிடிப்பது, எங்கள் செயல்திட்டம் நாட்டை வளர்ச்சியடையச் செய்வது. வறுமையில் இருந்து விடுபடவும், இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு தலைமை தாங்கும் வகையில் கர்நாடகாவில் இளம் அணியை பாஜக உருவாக்கி வருகிறது. கர்நாடகாவில் பல உலகளாவிய மையங்களை உருவாக்குவது எங்கள் முயற்சி என்றார்.

'டபுள் எஞ்சின் அரசு' என்பதன் அர்த்தம் குறித்து கட்சித் தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது வளர்ச்சியின் வேகத்தைக் குறிக்கிறது என்றார். இரட்டை இயந்திர ஆட்சி என்பதன் பொருள் வளர்ச்சியின் இரட்டை வேகம். பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு இருக்கும் இடங்களில் ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் கர்நாடகா சென்று அம்மாநில மக்களின் ஆசிர்வாதத்தைப் பெறவுள்ளேன்.அங்கு பிரசாரம் செய்த பாஜக தலைவர்கள் அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தைப் பெற்றதாக கூறியுள்ளனர்.இது பாஜக மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

224 வேட்பாளர்கள் பட்டியலில் பாஜக 50 க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கியது, இதன் விளைவாக கட்சியின் சில மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவடி மற்றும் கட்சியை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point