தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mekedatu: மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொல்லை தருகிறது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காட்டம்

Mekedatu: மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொல்லை தருகிறது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காட்டம்

Marimuthu M HT Tamil
Sep 12, 2023 10:35 AM IST

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் விமர்சனங்களைத் தமிழகத்தின்மீது வைத்துள்ளார்.

சித்த ராமையா
சித்த ராமையா

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'மேகதாது விவகாரத்தில் தேவையற்ற தொல்லைகளை தமிழ்நாடு தருகிறது. மேகதாது திட்டத்தை எதிர்ப்பதற்கு, தமிழகத்திற்கு எந்த காரணமும் இல்லை; எங்கள் பகுதியில் நாங்கள் அணை கட்டுகிறோம்.  ஆனால், மத்திய அரசும் தாமதம் செய்கிறது.

177 டிஎம்சி காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு நாங்கள் சராசரி ஆண்டுகளில் தரவேண்டும். ஆனால், நீர்ப்பற்றாக்குறை இருக்கும் ஆண்டுகளில் நீர்ப்பற்றாக்குறை சூத்திரத்தைப் பின்பற்றி, நீர்ப்பங்கீடு செய்யவேண்டும். காவிரி நீர்ப்பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து தொல்லை தந்து வருகிறது.

பாஜக தலைமையிலான அரசு, கனகபுரா என்னுமிடத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு, தொடர்ந்து அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. காவிரி நதி நீர் ஆணையம், பாஜக அரசின் கீழ் இருப்பதால் தான் இந்நிலை’ எனத் தெரிவித்தார்.

அதேபோல்,  காவிரி நீர்ப்பங்கீடு விவகாரத்தில் மேக தாதுவில் அணைகட்டுவது ஒன்றே ஒரே தீர்வு என கர்நாடக அரசு கருதி வருகிறது. ஆனால், இதற்கு தமிழ்நாடு அரசு காவிரி டெல்டாவின் நீண்ட பயன்பாட்டுப் பகுதியைச் சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டுக்கு இல்லாத நீர் ஆதாரத்தைச் சுட்டிக்காட்டியும் காவிரி நீர் ஆணையத்தில் வாதங்களை முன்வைத்துவருகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்