தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ins Vagir: கடற்படையின் 'வலிமை'- ‘வகிர்’ நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பம்சங்கள்!

INS Vagir: கடற்படையின் 'வலிமை'- ‘வகிர்’ நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பம்சங்கள்!

Manigandan K T HT Tamil
Jan 23, 2023 01:02 PM IST

இந்திய கடற்படையில் ஐந்தாவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலான வகீரை (VAGIR) இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்தாவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்தாவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டது. இது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பயணமாகும்.

Project-75 கீழ் இந்த நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

திட்டம்-75

திட்டம்-75 ஆனது ஸ்கார்பீன் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்சின் கடற்படைக் குழுவுடன் இணைந்து மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்.) இல் உருவாக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஸ்கார்பீனில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த அம்சங்களை உறுதி செய்துள்ளது (மேம்பட்ட ஒலி உறிஞ்சுதல் நுட்பங்கள், குறைந்த கதிர்வீச்சு அளவுகள், ஹைட்ரோ-டைனமிகலாக உகந்த வடிவம் போன்றவை) மற்றும் துல்லியமான வழிகாட்டப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிரி மீது தாக்குதலை நடத்தும் திறன். நீருக்கடியில் அல்லது மேற்பரப்பில் இருக்கும் போது ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடங்கலாம்.

நவம்பர் 12, 2020 அன்று தொடங்கப்பட்டு 'வாகிர்' என்று பெயரிடப்பட்டது. அதன் புதிய பரிமாணத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல், இதுவரை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களிலும் மிகக் குறைந்த கட்டுமான நேரத்தை எடுத்துக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் இதுவே ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதிகள்

இதற்கு முன்பு வாகிர் நீர்மூழ்கிக் கப்பல், நவம்பர் 1, 1973 இல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தடுப்பு மற்றும் ரோந்து உட்பட பல செயல்பாட்டு பணிகளை மேற்கொண்டது. சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டுக்கு சேவையாற்றிய நீர்மூழ்கிக் கப்பல் ஜனவரி 2001 இல் நிறுத்தப்பட்டது.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பல்வேறு வகையான பணிகளை மேற்கொள்ளும்.

சிறந்த செயல்பாட்டு திறன்களை அனுமதிக்கும் அதிநவீன SONAR மற்றும் சென்சார் தொகுப்பு ஆகியவையும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளன. கூடுதலாக, மேம்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் (PERMASYN) அதன் உந்துவிசை மோட்டாராகவும் உள்ளது.

IPL_Entry_Point