தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Apple Store: இந்தியாவின் முதல் ‘ஆப்பிள் ஸ்டோர்’ திறக்கப்பட்டது; வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

Apple Store: இந்தியாவின் முதல் ‘ஆப்பிள் ஸ்டோர்’ திறக்கப்பட்டது; வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 18, 2023 11:24 AM IST

India's first Apple store: இன்று காலை காலை 11 மணிக்கு மும்பை ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்ட நிலையில், டெல்லி சாகேத் மாலில் அடுத்த ஸ்டோர் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டு போன் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களின் ஒரு பகுதி
இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டு போன் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களின் ஒரு பகுதி

ட்ரெண்டிங் செய்திகள்

ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், நேற்று தனது ட்விட்டரில் பக்கத்தில் ஸ்டோர் திறப்பு பற்றிய உற்சாக அறிவிப்பை வெளியிட்டார். மேலும் மும்பை ஸ்டோரில் இருந்து தனது குழுவுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்.

அதில், "ஹலோ, மும்பை! நாளை புதிய ஆப்பிள் பிகேசி (பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்) எங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்க முடியாது." என்று குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே ஆப்பில் ஸ்டோர் வைப் மும்பைவாசிகளை சுற்றிப் போட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவர்களை மேலும் உற்சாகமாக்கியது.

 

இன்று காலை காலை 11 மணிக்கு மும்பை ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்ட நிலையில், டெல்லி சாகேத் மாலில் அடுத்த ஸ்டோர் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது முதல் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு விரைவில் அதன் ஸ்டோரை திறக்க முயற்சித்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக திட்டங்கள் காலதாமதம் ஆனது.

தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில், போன் வாங்குதற்கு வளாகத்தின் வெளியே மக்கள் குவிந்தனர். காலையிலேயே நீண்ட வரிசையில் நின்ற மக்களை கட்டுப்படுத்த முடியாமல் நிறுவனத்தினர் திணறினர். பெரும்பாலும் பணம் படைத்தவர்களே வந்ததால், வரிசையில் நிற்க அவர்கள் சிரமம் அடைந்தனர். இருப்பினும் தங்கள் ஆதர்ஷ போனை வாங்குவதற்காக அவர்கள் அதை பொறுத்துக் கொண்டனர்.

ஆப்பிள் அதன் சமீபத்திய ஐபோன் 14 மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. அது உலகளாவிய வெளியீட்டிற்கு சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான விஸ்ட் ரான், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் ஆகிய முதல் மூன்று உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்