தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hyderabad-sabarimala Special Train Via Tamil Nadu From Dec 5

Sabarimala special train : தமிழகம் வழியே ஹைதராபாத்-சபரிமலை சிறப்பு ரயில்!

Divya Sekar HT Tamil
Nov 25, 2022 08:59 AM IST

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹைதராபாத் முதல் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியே டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

ஹைதராபாத்-சபரிமலை சிறப்பு ரயில்
ஹைதராபாத்-சபரிமலை சிறப்பு ரயில்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக சென்று வருகின்றனர். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ஹைதராபாத் முதல் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியே டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று(நவ 24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”ஹைதராபாத் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.07053) டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும்.

ஹைதராபாத்தில் திங்கள்கிழமை தோறும் மாலை 3.50-க்கு புறப்படும் இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணிக்கு கொல்லம் சென்றடையும்.மறுமார்க்கமாக வண்டி எண்.07054 டிசம்பர் 7ஆம் தேதி முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும்.

கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30-க்கு புறப்படும் இந்த ரயில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்