தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maharashtra Rain : வெள்ளத்தில் மூழ்கிய நாக்பூர்.. பெண் ஒருவர் பலி.. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் தவிக்கும் மக்கள்!

Maharashtra Rain : வெள்ளத்தில் மூழ்கிய நாக்பூர்.. பெண் ஒருவர் பலி.. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் தவிக்கும் மக்கள்!

Divya Sekar HT Tamil
Sep 24, 2023 11:51 AM IST

நாக்பூரில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

நாக்பூரில் பெய்த தொடர் கனமழை
நாக்பூரில் பெய்த தொடர் கனமழை

ட்ரெண்டிங் செய்திகள்

ஏரியில் இருந்து வெளியேறிய நீர் மற்றும் பலத்த மழையின் காரணமாக நாக்பூர் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. சாலைகளில் நிறுத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருந்தது. பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

சுமார் 2 மணி நேரத்தில் மட்டும் 10 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நேற்று நாக்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி ராணுவமும் வரவழைக்கப்பட்டனர்.

நாக்பூரில் செவி மற்றும் வாய் பேச இயலாதோர் பயிலும் சிறப்புப் பள்ளி வளாகத்திலும் மழைநீர் சூழ்ந்தது. அங்கு சிக்கி தவித்த 70 மாணவர்களை அவர்கள் மீட்டனர். மேலும் பெண்கள் கல்லூரி விடுதியை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு சிக்கி தவித்த 50 மாணவிகள் மீட்கப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்டப்பட்டனர். இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் பலியானதாக மாநகராட்சி தெரிவித்தது.

இதேபோல 14 கால்நடைகளும் உயிரிழந்தன. இந்நிலையில் இன்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் சார்பில் அடுத்த 24 மணி நேரத்தில், நாக்பூர் மாவட்டத்திற்கு அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்