தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Punjab:பஞ்சாபில் விபரீதம்-விஷவாயு தாக்கியதில் 9 பேர் பரிதாப பலி

Punjab:பஞ்சாபில் விபரீதம்-விஷவாயு தாக்கியதில் 9 பேர் பரிதாப பலி

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 30, 2023 10:59 AM IST

Gas Leak:பஞ்சாப் மாநிலம் கியாஸ்புரா பகுதியில் இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

பஞ்சாபில் விஷவாயு தாக்குதல்
பஞ்சாபில் விஷவாயு தாக்குதல்

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் மாநிலம் கியாஸ்புரா பகுதியில் இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா பகுதியில் உள்ள ஒரு சிறிய ஆலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய ஆலை ஒன்றில் மூடிய அறையில் விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலையின் உள்ளே இருந்தவர்கள் சுயநினைவிழந்து உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள NDRF குழுவினர் உறுதியாக இது வாயு கசிவு விபத்து தான். ஆனால் என்ன வாயு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதே சமயம் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் உள்ளூர் பகுதி மக்கள் அங்கே நுழைய கூடாது என்று தடுக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக மத்திய பிரதேச மாநில போபாலில் 1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அங்கு உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதி மக்கள் இன்றளவும் அதன் தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்