தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral: 'நீங்க ரொம்ப அழகு' ஆண் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த பயணி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

Viral: 'நீங்க ரொம்ப அழகு' ஆண் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த பயணி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

Karthikeyan S HT Tamil
Apr 23, 2023 10:49 AM IST

Drunk passenger Arrested: அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் இருந்து அலாஸ்கா சென்ற விமானத்தில் மதுபோதையில் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானம்
விமானம்

ட்ரெண்டிங் செய்திகள்

அமெரிக்காவின் மின்னசோட்டா - அலஸ்கா இடையே பறந்த டெல்டா விமானத்தில் டேவிட் ஆலன் பர்க் என்கிற 61 வயது பயணி முதல் வகுப்பில் பயணித்திருக்கிறார்.அவருக்கு பிடித்தமான ரெட் வைன் உட்பட பல சுவையான உணவு வகைகளை விமான பணியாளர் ஒருவர் முறைப்படி பரிமாறி இருக்கிறார். அவரது சர்வீசை பார்த்து சொக்கிப் போன ஆலன், அந்த ஆண் பணியாளரை பார்த்து நன்றி தெரிவிக்க விரும்பி இருக்கிறார்.

அதன்படி, அவரை தேடிச் சென்று மகிழ்ச்சி மிகு தனது நன்றியையும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், அப்படியே அந்த ஆண் பணியாளரிடம் ’நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்’ என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த அந்த பணியாளர் நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர், உன்னை முத்தமிடட்டுமா? என்று கேள்வி கேட்ட டேவிட், உடனே அந்த பணியாளரை அணைத்து கழுத்தில் முத்தமிட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய டேவிட் தூங்குவதற்கு முன் மேலும் இரண்டு கிளாஸ் ரெட் ஒயின் குடித்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த அந்த பணியாளர், ஆறு மணி நேர விமானப் பயணம் முடியும் வரை, ஆலன் கண்ணில் படாது மறைந்து இருந்தே விமானத்தில் பயணித்திருக்கிறார். விமானம் தரையிறங்கியதும் முறைப்படி புகார் தந்திருக்கிறார். போலீஸார் அந்த புகாரை பதிவு செய்து, டேவிட்டை கைது செய்துள்ளனர். போதையில் தவறாக நடக்க முயன்றது, விமான கேப்டனுக்கான உணவைத் தட்டிவிட்டது என ஆகாய பயணத்தில் பயணி ஆலன் அலப்பறைகள் அனைத்தும் அந்த புகாரில் பதிவாகி இருக்கின்றன. இது தொடர்பாக ஏப்ரல் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டேவிட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்