தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  21 நாட்கள் தேடல்.. மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட ஆதரவற்ற பெண்!

21 நாட்கள் தேடல்.. மீண்டும் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட ஆதரவற்ற பெண்!

Manigandan K T HT Tamil
Jan 24, 2023 10:32 AM IST

Mumbai: மும்பையில் தலையில் அடிபட்டு கிடந்த பெண்ணை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

டிசம்பர் 31, 2022 அன்று மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள தெருவில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் இருப்பதை காவல் துறையினர் கண்டனர். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர், ஹரியானாவைச் சேர்ந்த டாக்டர் கரோலினா கபூர் என்பது பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

பால்காவில் ஜீவன் ஆனந்த் சன்ஸ்தாவின் சமர்த் ஆசிரமம் மேற்கொண்ட முயற்சியால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோலினா கபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறகு, எங்கள் அமைப்பின் பணியாளர்கள் குழு டெல்லி, ஹரியானாவில் உள்ள போலீஸ் மூலமாகவும், இணையம் மூலமாகவும் அவரது உறவினர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டது.

21 நாட்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, ஆசிரமத்தின் மருத்துவ உளவியலாளர் கரோலினா கபூரின் குடும்பத்தை தொடர்பு கொண்டனர். கரோலினாவிடம் ஆலோசனை அளித்தபோது தகவல்களை சேகரித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் மாமாவும் மைத்துனரும் மும்பைக்கு வந்து, கோரேகான் காவல் நிலையத்தில் சரிபார்ப்புச் செயல்முறைக்குப் பிறகு, அவர்களிடம் கரோலினா கபூர் ஒப்படைக்கப்பட்டார்.

தன்னை தனது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்ததற்கு நன்றி கூறிவிட்டு கரோலின் கபூர் ஹரியானா புறப்பட்டுச் சென்றார்.

அவர் எப்படி மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு வந்தார் என்பதும் தலையில் அடிபட்டது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை.

IPL_Entry_Point