தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இந்த மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் பெண்களுக்கு வெகுமதி!

இந்த மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் பெண்களுக்கு வெகுமதி!

Manigandan K T HT Tamil
Jan 24, 2023 09:31 AM IST

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் அளிக்கும் திட்டத்தை சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று

அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், "உள்ளூர் பழங்குடி மக்களிடையே குறைவான கருவுறுதல் விகிதம் சிக்கிமில் தீவிர கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இந்த செயல்முறையை மாற்றியமைக்க நாம் தான் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களின் வீடுகளுக்கு குழந்தைகளை ஓராண்டுக்கு கவனித்துக் கொள்வதற்காக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.10,000 மாத ஊதியமாக வழங்கப்படும்" என்றார்.

7 லட்சம் மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமான சிக்கிம், பல ஆண்டுகளாக குறைந்த மொத்த கருவுறுதல் விகிதத்துடன் (TFR) போராடி வருகிறது.

சிக்கிமின் 12 பழங்குடி சமூகங்களில் குறைந்தது இரண்டின் (பூட்டியா மற்றும் லிம்பு ) மக்கள்தொகை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வருகிறது.

சிக்கம் முதல்வர் பிரேம் சிங் தமாங்
சிக்கம் முதல்வர் பிரேம் சிங் தமாங் (Rahul Singh)

இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கிம் அரசின் இத்தகைய அறிவிப்பு அந்த மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுமார் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். சமீபத்தில் சீனாவில் மக்கள்தொகை குறைந்த செய்திகளை நாம் படித்தது நினைவுகூரத்தக்கது.

IPL_Entry_Point