தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  'India' கூட்டணி பெயருக்கு கிளம்பியது எதிர்ப்பு - டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

'INDIA' கூட்டணி பெயருக்கு கிளம்பியது எதிர்ப்பு - டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

Karthikeyan S HT Tamil
Aug 04, 2023 12:05 PM IST

INDIA என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமு, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' Indian National Democratic Inclusive Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதேபோன்று பாஜகவும் தங்கள் ஆதரவு கட்சிகளோடு இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டி இருக்கிறது.

இந்நிலையில் INDIA என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கிரிஷ் உபாத்தியாயா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளார். இந்தியா எனப் பெயர் வைத்துள்ளது. அப்பாவி மக்களின் அனுதாபத்தையும் வாக்குகளையும் பெறுவதற்கும் அரசியல் ஆதாயத்திற்கான கருவியாக பயன்படுத்துவதற்குமே என்பதால் இந்த பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.  இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய அரசும், தலைமைத தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் இரண்

நாட்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்