தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi Fog : கன மழை, மூடு பனி என தவிக்கும் தலைநகர் டெல்லி

Delhi Fog : கன மழை, மூடு பனி என தவிக்கும் தலைநகர் டெல்லி

Priyadarshini R HT Tamil
Jan 31, 2023 12:41 PM IST

கடுமையான மழைப்பொழிவுக்கு அடுத்த நாள் கடுமையான பனி, தலைநகர் டெல்லி மாநகரை மூழ்கடித்தது. இன்று குறைந்தபட்ச வெப்பநிலையே 9.9 டிகிரி செல்ஷியஸ் என குறைந்தது.

மூடுபனியில் டெல்லி தலைநகரம்.
மூடுபனியில் டெல்லி தலைநகரம்.

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி பனிமுட்டத்துடன் காணப்படுவதைத் தொடர்ந்து இந்திரா காந்தி சர்வேத விமான நிலையம், தனது பயணிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் பனிமூட்டத்தால் எதிரே வரக்கூடியவைகள் தெளிவாக தெரியாது என்பதால், லோ விசிபிலிட்டி ப்ரொசீஜர் நடைமுறையில் (பனி மூட்ட காலங்களில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள்) உள்ளது. பயணிகள் விமானம் குறித்த உடனடி விவரங்களுக்கு அந்தந்தந்த ஏர்லைன்களை தொடர்புகொண்டு பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இப்போது வரை விமானங்கள் எவ்வித இடையூறுமின்றி தொடந்து இயக்கப்பட்டு வருவதாக விமான நிலையத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. காற்று தர அளவீட்டில் 192 என்று உள்ளது. காற்றின் தரம் மிதமானதாக இருக்கும் என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 

காற்றின் தர குறி 0 முதல் 50 வரை இருந்தால், நல்லது என்று அர்த்தம். 51 முதல் 100 வரை இருந்தால், திருப்தியாக உள்ளது என்று பொருள். 101 முதல் 200 என்றால் மிதமானதாக உள்ளது என்று அர்த்தம். 201 முதல் 300 வரை என்றால் மோசமானதாக உள்ளது என்றும், 301 முதல் 400 என்றால் மிக மிக மோசமாக உள்ளது என்றும், 401 முதல் 500 என்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பொருள். 

டெல்லி தலைநகர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையே காணப்படும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று கணித்திருந்தது. “மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தொடர் பனிப்பொழிவு, சமவெளிகளிலும் இருக்கும் என்பதால், அதன் மூலம் வரும் நாட்களில் குறைந்த வெப்பநிலை ஏற்படலாம். பனிக்காற்று இல்லை. வரும் நாட்களில் இன்னும் வெப்பநிலை இரண்டு அல்லது மூன்று டிகிரிகள் குறையலாம் இதனால் பனி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஜம்மு-காஷ்மீர், உத்ரகாண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் 60 மில்லிமீட்டர் அளவு பனிப்பொழிவு ஏற்படுகிறது. உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லி தலைநகர பகுதிகளில் கனமானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

IPL_Entry_Point

டாபிக்ஸ்